» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மருத்துவமனைக்குள் புகுந்து பரோல் கைதி சுட்டுக் கொலை - பீகாரில் பயங்கரம்!

வெள்ளி 18, ஜூலை 2025 11:04:25 AM (IST)

பீகாரில் பரோல் கைதி ஒருவரை மருத்துவமனைக்குள் புகுந்த கும்பல் ஒன்று சுட்டுக்கொலை செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

பிகார் மாநிலம் பாட்னாவில் கொலைக் குற்றவாளியாக பரோலில் வெளியே வந்த சந்தன் என்பவர் நேற்று, தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பினர். காயமடைந்த சந்தன் சிகிச்சை பலனின்றி பலியானார். இதுகுறித்து பாட்னா காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருவது முதல்வர் நிதிஷ் குமாருக்கு நெருக்கடியாக மாறியுள்ளது. இந்த சம்பவத்துக்கு முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory