» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சிறு நகைக்கடன்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு பரிந்துரை
வெள்ளி 30, மே 2025 12:07:50 PM (IST)

ரூ.2 லட்சத்திற்கும் குறைவாக சிறு நகை கடன் வாங்குபவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
இந்தியாவில் வங்கிகளுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி ரிசர்வ் வங்கியில் இருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. ரிசர்வ் வங்கியின் முதன்மை பொது மேலாளர் தருண் சிங் அனுப்பிய அந்தச் சுற்றறிக்கையில் தங்க நகைக்கடனில் முறைகேடு நடப்பதாகவும் தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் பெறுவதில் ஒழுங்கற்ற நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகவும் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் தங்க நகைக்கடன் வழங்குவதில் வங்கிகளுக்கான புதிய வரைவு விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது மேலும் நகைக்கடனில் முறைகேடு நடப்பதை தடுக்கும் வகையில் நகை வாங்கிய ரசீதைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட புதிய விதிகள் கொண்டு வரப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வங்கிகளில் நகைகளை அடகு வைப்பவர்கள், ஆண்டுதோறும் வட்டியை மட்டுமே செலுத்தி, மறு அடகு வைக்கலாம் என்றிருந்த நிலையை மாற்றி, அசலுடன் வட்டியையும் சேர்த்து செலுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டு நெறிமுறையைக் கொண்டு வந்தது. இந்த புதிய விதிமுறைகளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அவசர தேவைகளுக்காக வங்கியில் நகைகளை வைத்து கடன் பெறுபவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவார்கள் என கவலை தெரிவித்தனர்.
இந்த நிலையில், சிறு நகைக்கடன்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. அதாவது, ரூ.2 லட்சத்திற்கும் குறைவாக கடன் வாங்குவோருக்கு புதிய விதிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்; புதிய விதிமுறைகளை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் செயல்படுத்தலாம் எனத்தெரிவித்துள்ளது. நகைக்கடன் நிறுவனங்கள், பொதுமக்களிடம் இருந்து பெற்ற கருத்துக்களின் அடிப்படையில் விதிகளை தளர்த்த மத்திய நிதி அமைச்சகம் ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்து, பௌத்தர், சீக்கியர்களை தவிர பிறரின் எஸ்சி சாதி சான்றிதழ் ரத்து : பட்னாவிஸ் அறிவிப்பு!
வெள்ளி 18, ஜூலை 2025 11:58:31 AM (IST)

கர்நாடக முதல்வர் சித்தராமையா குறித்து தவறாக மொழிபெயர்ப்பு... சர்ச்சையில் சிக்கிய மெட்டா!
வெள்ளி 18, ஜூலை 2025 11:50:54 AM (IST)

மருத்துவமனைக்குள் புகுந்து பரோல் கைதி சுட்டுக் கொலை - பீகாரில் பயங்கரம்!
வெள்ளி 18, ஜூலை 2025 11:04:25 AM (IST)

பீகாரில் 125 யூனிட் வரை வீடுகளுக்கு மின் கட்டணம் இல்லை : முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு
வியாழன் 17, ஜூலை 2025 11:57:30 AM (IST)

முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிக்க புதிய மாற்றம்: இனி ஒரு பெட்டிக்கு 150 டிக்கெட்டுகள் மட்டுமே!
வியாழன் 17, ஜூலை 2025 10:50:52 AM (IST)

வீடியோவை காட்டி மிரட்டி கல்லூரி மாணவி பலாத்காரம்: பேராசிரியர்கள் உட்பட 3பேர் கைது!
புதன் 16, ஜூலை 2025 5:44:03 PM (IST)
