» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மராட்டியத்தில் இருமொழிக் கொள்கை தொடரும் : மும்மொழி கொள்கை நிறுத்தி வைப்பு!
புதன் 28, மே 2025 5:06:53 PM (IST)
இந்தி கட்டாயம் ஆக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து மராட்டியத்தில் இரு மொழிக் கொள்கையே தொடரும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மராட்டியத்தில் தேசிய கல்வி கொள்கை 2020ன் கீழ், மராட்டியம் மற்றும் ஆங்கில வழி கல்வி பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை 3வது மொழிப் பாடமாக இந்தி கட்டாயம் ஆக்கப்பட்டது. இதற்கு உத்தவ் தாக்கரே சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
3வது மொழியாக இந்தி மொழி சேர்க்கப்பட்டு இருப்பது கல்வி ரீதியாக நியாயமற்றது என்றும் இது மாணவர்களின் உளவியல் நலனுக்கு ஏற்றது அல்ல என்றும் மராட்டிய மாநில மொழி ஆலோசனைக் குழு எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த நிலையில் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து மராட்டியத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தி கட்டாயம் என்ற மும்மொழி கொள்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே உள்ள மராட்டி, ஆங்கிலம் என்ற இரு மொழி கொள்கையே பின்பற்றப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தாதா பூசே அறிவிப்பு வெளியிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இண்டிகோ விமான சேவை இயல்பு நிலைக்குத் திரும்பியது: 2,000+ விமானங்கள் இயக்கம்!
சனி 13, டிசம்பர் 2025 5:42:25 PM (IST)

மெஸ்ஸியின் கொல்கத்தா நிகழ்ச்சியில் வன்முறை: விசாரணை நடத்த மம்தா உத்தரவு
சனி 13, டிசம்பர் 2025 4:35:33 PM (IST)

திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றி: கேரள மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி!
சனி 13, டிசம்பர் 2025 4:19:29 PM (IST)

கேரளத்தில் நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு: 6பேருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை!
சனி 13, டிசம்பர் 2025 11:17:40 AM (IST)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்!
சனி 13, டிசம்பர் 2025 10:51:14 AM (IST)

காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு : மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்
சனி 13, டிசம்பர் 2025 10:39:32 AM (IST)


.gif)