» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு : மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

சனி 13, டிசம்பர் 2025 10:39:32 AM (IST)

இந்​திய காப்​பீட்டு துறை​யில் அந்​நிய நேரடி முதலீட்டை 100 சதவீத​மாக உயர்த்​து​வதற்​கான மசோ​தாவுக்கு மத்​திய அமைச்​சரவை நேற்று ஒப்​புதல் அளித்​துள்​ளது.

மக்​களவை அறிக்​கை​யின்​படி, காப்​பீட்டு துறை​யில் முதலீட்டை அதி​கரிக்​க​வும், வளர்ச்சி மற்​றும் மேம்​பாட்டை துரிதப்​படுத்​த​வும், வணி​கம் செய்​வதை எளி​தாக்​கும் வகை​யில் காப்​பீட்டு சட்​டங்​கள் (திருத்த) மசோதா 2025 உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. நாடாளுமன்ற கூட்​டத்​தொடரில் அறி​முகம் செய்ய பட்​டியலிடப்​பட்ட 13 சட்​டங்​களில் இது​வும் ஒன்​றாகும்.

இந்த ஆண்டு பட்​ஜெட் உரை​யில், நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன், புதிய தலை​முறை நிதித் துறை சீர்​திருத்​தங்​களின் ஒரு பகு​தி​யாக காப்​பீட்​டுத் துறை​யில் அந்​நிய முதலீட்டு வரம்பை தற்​போதுள்ள 74 சதவீதத்​திலிருந்து 100 சதவீத​மாக உயர்த்​தும் திட்​டத்தை முன்​மொழிந்​தார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

ரூ.11,718 கோடி: 2027-ல் இந்​திய மக்​கள் தொகை கணக்​கெடுப்பு நடை​பெறும் என்று மத்​திய அரசு அறி​வித்​துள்​ளது. இந்​நிலை​யில், இந்த திட்​டத்​துக்​காக ரூ.11,718 கோடி நிதி ஒதுக்​கீடு செய்ய அமைச்​சரவை அனு​மதி அளித்​துள்​ள​தாக மத்​திய அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் நேற்று தெரி​வித்​தார்.

இதுகுறித்து அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறுகை​யில், "மக்​கள் தொகை கணக்​கெடுப்பு இரண்டு கட்​டங்​களாக நடத்​தப்​படும். 2026 ஏப்​ரல் முதல் செப்​டம்​பர் வரை வீட்​டுப் பட்​டியல் மற்​றும் வீட்​டு​வசதி கணக்​கெடுப்​பும், 2027 பிப்​ர​வரி​யில் மக்​கள் தொகை கணக்​கெடுப்​பும் நடத்தப்பட உள்​ளன’’ என்​றார். இவைத​விர, அணுசக்தி மசோ​தா​வின் கீழ் அணுசக்தி துறை​யில் தனி​யார் பங்​கேற்​புக்​கும் அமைச்​சரவை ஒப்​புதல் தெரி​வித்​துள்​ளது.

100 நாள் வேலை திட்டம்: மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் (எம்என்ஆர்இஜிஏ) பெயரை மாற்றவும், வேலை நாட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இனி அந்த திட்டம், பூஜ்ய பாபு கிராமீன் ரோஜ்கர் யோஜனா எனவும், வேலை நாட்கள் 100 நாட்களில் இருந்து 125 நாட்களாகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory