» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இஸ்லாமியரோ, கிறிஸ்தவரோ இந்து கோவில் வாரிய உறுப்பினராக முடியுமா? கனிமொழி கேள்வி

வெள்ளி 9, ஆகஸ்ட் 2024 5:41:50 PM (IST)

வக்பு வாரிய மசோதா இஸ்லாமியர்களுக்கு, சிறுபான்மையினருக்கு முற்றிலும் எதிரானது. இஸ்லாமியோரே, கிறிஸ்தவரோ இந்து கோவிலில் உள்ள வாரியத்தில் உறுப்பினராக முடியுமா? என்று கனிமொழி எம்பி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் பேசிய அவர்,"இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் தானமாக வழங்கிய நிலங்கள் மூலம் வரும் வருவாயானது மசூதி, இஸ்லாமியர்களின் கல்வி மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வஃக்பு சொத்துக்களை நிர்வகிப்பதற்காக கடந்த 1955-ம் ஆண்டு வஃக்பு வாரிய சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தில்தான் பல முக்கிய திருத்தங்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டிருக்கிறது. 

இந்த சட்டதிருத்த மசோதாவை இன்று மக்களவையில் தாக்கல் செய்தது. இந்த சட்ட திருத்த மசோதாவில் வக்பு வாரியங்களின் செயல்பாடுகளில் வெளிப்படை தன்மை, வாரியத்தில் இஸ்லாமிய பெண்கள் மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது, வாரியத்தின் அதிகாரத்தை ஒழுங்குபடுத்துவது உட்பட பல்வேறு முக்கிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

இது மிகவும் தூக்ககரமான நாளாகும், இந்த பாராளுமன்றத்தில் இது மசோதா வேதனை அளிக்கிறது. இந்த நாடாளுமன்றத்திற்கு நான் புதிதாக வந்தபோது, உறுப்பினர்கள் பலரும் கையில் அரசியில் அமைப்பின் ஒரு நகலைக் கொண்டுவந்தார்கள். அதைக் காப்பாற்ற, பாதுகாக்கப் பட வேண்டும் என்ற எண்ணத்தில், அதுதான் மிகவும் ஆதிக்கம் பெற்றது. ஆனால், இந்த ஒன்றிய அரசு வெளிப்படையாக அரசிலைமைப்புக்கு எதிராக நடக்கிறது என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது அரசியல் அமைப்புக்கு மட்டுமல்லாமல், கூட்டாட்சிக்கு எதிராக இருக்கிறது, மதம் சார்ந்த சிறுபான்மைக்கு எதிராக இருக்கிறது.

மனிதத் தன்மைக்கு எதிராக இருக்கிறது, இது நீதிக்கு எதிராக இருக்கிறது, ஒவ்வொரு விதத்திலும் இது நீதியை எதிர்க்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 25 & 26 இருக்கின்றன, அவை என்ன கூறுகிறது என்றால், ஒவ்வொருவருக்கும் எந்த மதத்தையும் பின்பற்ற உரிமை இருக்கிறது மதரீதியான விவகாரங்களை அவர்களே நிர்வாகம் செய்துகொள்ளலாம் என்ற உரிமை கொடுக்கிறது. வக்பு வாரியத்தில் இஸ்லாமியர் அல்லாதவர் உறுப்பினராக முடியும். இஸ்லாமியோரே, கிறிஸ்தவரோ ஒரு இந்து கோவிலில் உள்ள வாரியத்தில் உறுப்பினராக முடியுமா? அதை நீங்கள் அனுமதி செய்வீர்களா? சீக்கியர்களுக்கும் இதே சட்டம் தான். மற்றவர்கள் தலையிட நீங்கள் அனுமதிப்பீரா?

அப்படி என்றால் ஒரு குறிப்பிட்ட மதத்தை நம்பிக்கை இல்லாதவருக்கு, அந்த மதம் சார்ந்த முடிவை எடுக்கும் உரிமையை எப்படி வழங்கலாம். இது அநீதியாக உங்களுக்குத் தோன்றவில்லையா? நீதிக்கு எதிரானதாக உங்களுக்குத் தோன்றவில்லையா? இது அரசியலமைப்பின் 30வது பிரிவுக்கு நேரடியாக இது எதிராக இருக்கிறது. சிறுபான்மையினர் தங்கள் நிறுவனங்களை நிர்வகித்துக்கொள்ள உரிமையை வழங்குகிறது. இப்போது நீங்கள் அந்த உரிமையை, அந்த முடிவெடுக்கும் உரிமையை ஆட்சித் தலைவர்களுக்குக் கொடுக்கிறீர்கள். அந்த சொத்து என்பது யாருக்குச் சொந்தமானது என்பது முடிவெடுக்கும் உரிமையை யார் கையில் கொடுக்கிறீர்கள்?

பல பழைய மசூதிகள் இப்போது ஆபத்தில் தான் இருக்கின்றன. திடீரென்று ஒரு பொதுநல வழக்க போடப்பட்டது, அங்கு மக்கள் தொல்லியலாளர்கள் அங்கு அனுப்பப்பட்டார்கள். முன்புயொரு காலத்தில், அது ஒரு கோவிலாக இருந்தது என்று இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் வெறுப்பு பிரச்சாரம் அதிகமானது, பிரிவினை அதிகமானது, நாட்டு மக்களிடையே பிரிவினை உண்டானது, இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த மசோதா என்பது குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை இலக்காகக் கொண்டு தாக்குகிறது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பிரிவு 14 என்பதை எதிர்த்து இருக்கிறது, சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்பதற்கு எதிராக இருக்கிறது. அந்த சொத்து யாருடையது என்பதை உரிமை செய்ய வக்பு வாரியத்திற்கு உரிமை இருக்கிறது. இந்த மசோதா இஸ்லாமியர்களுக்கு, சிறுபான்மையினருக்கு முற்றிலும் எதிரானது. 

அவர்கள் இந்த நாடு, மதச்சார்பற்ற ஒரு நாடு என்ற நம்பிக்கையை அவர்கள் இழக்கிறார்கள். பல மொழிகள், பல மதங்கள், பல இனங்கள் சேர்ந்தவர்கள் இங்கு ஒன்றாக வாழலாம் என்று நம்பிக்கையை அவர்கள் இழக்கிறார்கள். இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்ற கனவுக்கு எதிராக இந்த மசோதா இருக்கிறது, நான் இதை எதிர்க்கிறேன்" எனப் பேசினார்.


மக்கள் கருத்து

kischaAug 12, 2024 - 09:51:10 AM | Posted IP 172.7*****

இந்தியா

இந்தியன்Aug 9, 2024 - 06:52:23 PM | Posted IP 162.1*****

இந்தியா ஒரு இந்து நாடு தான், இங்குள்ள பிற மதித்தனர் எல்லாம் மதம் மாறிய இந்தியர்கள் தான்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory