» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தெருநாய் கணக்கெடுப்பு பணிகளில் ஆசிரியர்கள்: டெல்லி அரசின் உத்தரவிற்கு கடும் எதிர்ப்பு!
திங்கள் 29, டிசம்பர் 2025 5:29:38 PM (IST)
டெல்லியில் தெருநாய்கள் கணக்கெடுப்பு பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்த அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
நாட்டின் தலைநகர் டெல்லி முழுவதும் உள்ள தெருநாய்களை கணக்கெடுக்கும் பணிக்கு அரசு மற்றும் தனியார் உட்பட அனைத்து பள்ளி ஆசிரியர்களையும் பயன்படுத்த டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பயிற்சிக்காக கல்வி நிறுவனங்களில் இருந்து நோடல் அதிகாரிகளை நியமிக்க அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் கல்வி இயக்குநரகம் (DoE) அறிவுறுத்தியுள்ளது.
பயிற்சியைத் தொடர்ந்து ஆசிரியர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள தெருநாய்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு சமர்பிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் டெல்லி அரசின் இந்த உத்தரவிற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. விலங்கு நல ஆர்வலர்கள், மற்றும் விலங்குகள் நலன் துறையைச் சார்ந்தவர்களுக்கு இந்தப் பணியை ஒதுக்காமல் தங்களுக்கு ஒதுக்குவது ஏன் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கல்வி சாராத பணிகளுக்கு ஆசிரியர்களை உட்படுத்துவது மாணவர்களின் கல்வியை பாதித்து, ஆசிரியர் தொழிலின் கண்ணியத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளனர். முன்னதாக உத்தரபிரதேசம், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் தெருநாய் கணக்கெடுப்புக்கு ஆசிரியர்களை நியமிக்கும் இதே போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது நாய் கணக்கெடுப்பு பணி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தீபக் தற்கொலை வழக்கு: யூடியூபர் ஷிம்ஜிதாவிற்கு நிபந்தனை ஜாமின்!
வியாழன் 12, பிப்ரவரி 2026 3:55:54 PM (IST)

ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி தனிநபர் தீர்மானம் தாக்கல்!
வியாழன் 12, பிப்ரவரி 2026 3:30:42 PM (IST)

இந்தியா உற்பத்தி செய்வதை உலக நாடுகள் விரும்பவில்லை: அனில் தகவல் பேச்சு!
வியாழன் 12, பிப்ரவரி 2026 11:30:14 AM (IST)

இந்தியர்களின் எதிர்காலத்தை அமெரிக்காவிடம் அடமானம் வைத்துவிட்டார் மோடி : ராகுல் பேச்சு!
வியாழன் 12, பிப்ரவரி 2026 11:27:00 AM (IST)

இந்தியாவின் முதல் 'மெல்லிசை சாலை' மும்பையில் திறப்பு: வாகன ஓட்டிகள் உற்சாகம்!
வியாழன் 12, பிப்ரவரி 2026 10:56:57 AM (IST)

பெங்களூரு மசாஜ் மையத்தில் கனடா பெண்ணுக்கு பாலியல் தொல்லை: ஊழியர் கைது!
புதன் 11, பிப்ரவரி 2026 12:21:43 PM (IST)

