» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாசரேத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா!

வியாழன் 9, மே 2024 9:54:11 AM (IST)



நாசரேத்தில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் நாசரேத் மர்காஷிஸ் பிரதான சாலை ஐந்தாவது தெரு முனையில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி தெற்கு மாவட்ட கொள்கை பரப்புச் செயலா ளர் இரத்தின பாண்டியன்  தலைமை தாங்கினார். பொருளாளர் அன்சார் அலி, செயலாளர் பாலமுருகன், வீரத்தமிழர் முன்னணி செயலாளர் பாஸ்கர், நாசரேத் மில்டன், பாஸ்கர், அனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்

.சிறப்பு அழைப்பாளராக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்  வழக்கறிஞர் சிவக்குமார் கலந்துகொண்டு நீர், மோர்  பந்தலை திறந்து வைத்து, பொது மக்களுக்கு நீர்மோர் வழங்கியும், தூய்மை பணியாளர்களுக்கு உடைகள் வழங்கியும் சிறப்பித்தார். இதற்கான ஏற்பாடுகளை திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி மருத்துவர் பாசறை தொகுதி செயலாளர் விஜய்ஆனந்த் தலைமை யில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பிரபு  ஆகியோர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory