» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மினி பஸ்சுக்குள் புகுந்து கண்டக்டர் மீது தாக்குதல்: 6 பேர் மீது வழக்கு!!!

ஞாயிறு 19, மே 2024 9:21:37 PM (IST)

நாகர்கோவில் புது குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சகாய ஜோஸ் (25). இவர் மினி பஸ்ஸில் கண்டக்டராக உள்ளார். பஸ்ஸில் பயணிகளை ஏற்றுவது தொடர்பாக சகாய ஜோசுக்கும் மற்றொரு மினி பஸ்பணியாளர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று வடசேரி அண்ணா ஸ்டேடியம் அருகே பயணிகளை ஏற்றுவதற்காக சகாய ஜோஸ் பணியாற்றும் மினி பஸ் நின்று கொண்டு இருந்தது.கண்டக்டர் சகாய ஜோஸ் பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது 6- பேர் கொண்ட கும்பல் இரும்பு கம்பிகளுடன் பஸ்சில் புகுந்து சகாய ஜோசை தாக்கினர்.

பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர்.அந்த கும்பல் கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றனர்.இந்த சம்பவம் குறித்து சகாய ஜோஸ் வடசேரி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி இறச்சகுளத்தை சேர்ந்த கமல்ராஜ், மேக்காமண்டபம் பிரகலாதன் (32) அருகு விளை அபினேஷ் (27) மற்றும் மகேஷ், கோவிந்தன் உட்பட ஆறு பேர் மீது  வழக்கு பகுதி செய்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory