» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கிர்கிஸ்தானில் இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: விஜய் வசந்த் எம்.பி அறிக்கை

ஞாயிறு 19, மே 2024 9:26:31 PM (IST)

கிர்கிஸ்தானில் இந்திய மாணவர்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதாக விஜய் வசந்த் எம்.பி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக் நகரில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதலில் இந்திய மாணவர்கள், குறிப்பாக குமரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

கிர்கிஸ்தான் நாட்டில் ஏராளமான இந்திய மாணவர்கள் உயர் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக மாணவர்களுக்கு இடையே நடந்த மோதலின் எதிரொலியாக இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டு வருவதாக செய்திகள் பரவின. கிர்கிஸ்தான் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு இந்திய மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்து விசாரித்தேன். 

இந்திய மாணவர்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதாகவும், அவர்களின் நலன் உறுதி செய்யப்படும் என தூதரக அதிகாரிகள் கூறியுள்ளனர். அங்குள்ள நிலைமையை தொடர்ந்து கண்காணித்து மாணவர்களின் பாதுகாப்பை இந்திய தூதரகம் தொடர்ந்து உறுதி செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறேன் என்று விஜய் வசந்த் எம்.பி தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory