» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

7-வது மாநில நிதிக்குழு மானிய விவரங்கள் பதிவேற்றம்: நிதிக்குழு தலைவர் மு.அலாவுதீன் ஆய்வு

சனி 27, டிசம்பர் 2025 10:40:07 AM (IST)



கன்னியாகுமரி மாவட்டத்தில்  7-வது மாநில நிதிக்குழு மானிய விவரங்கள் பதிவேற்றம் தொடர்பாக 7-வது மாநில நிதிக்குழு தலைவர் மு.அலாவுதீன், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. https://www.kumarionline.com/view/31_264241/20251227104007.html

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 7-வது மாநில நிதிக்குழு தலைவர் மு.அலாவுதீன், துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-7-வது மாநில நிதி குழு மானியம் தொடர்பான வினாப்படிவத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை இணையதளத்தில் உள்ளீடு செய்யும் போது பின்வரும் மூன்று நிலைகள் உள்ளன. 

அவை Filling and Saving, Submit, Approval ஆகும். மேலும் மாநில நிதிக்குழு மானிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் தகவல்களின் அடிப்படையிலேயே தொடர்ந்து வரும் ஐந்து நிதியாண்டுகளுக்கான மானியம் அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் என்பதால் அனைத்து தகவல்களையும் நன்றாக ஆய்வு செய்து உள்ளீடு செய்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள மக்கள்தொகை, வீடுகளின் எண்ணிக்கை மற்றும் சொத்து வரி வசூல், பரப்பளவு உள்ளிட்ட தகவல்கள் 100மூ சரிபார்க்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மற்றும் அனைத்து நகராட்சிகளின் நகர்மன்ற தலைவர்களுக்கு வினாப் படிவத்தினை பூர்த்தி செய்வது தொடர்பாக தகவல் தெரிவிக்க சம்மந்தப்பட்ட ஆணையர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. நாகர்கோவில் மாநகராட்சி, அனைத்து நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும் தரவுகளை உள்ளீடு செய்தல், சரிப்பார்த்தல் மற்றும் ஒப்புதல் செய்தல் பணியினை 09.01.2026-க்குள் முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளில் மேற்படி தரவுகளை உள்ளீடு செய்யும் பணியினை 31.12.2025-க்குள் முடித்திட தெரிவிக்கப்பட்டது. மாவட்ட ஊராட்சி தொடர்பான தகவல்களை உள்ளீடு செய்யும் பணியினை உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியருக்கான வினாப்படிவத்தில் உள்ள தகவல்களை உள்ளீடு செய்யும் பணியினை திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மைக்கேல் ஆன்றனி பெர்னாண்டோ, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, மண்டல துணை இயக்குநர் (நகராட்சி நிர்வாகம்) திருநெல்வேலி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அன்பு, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) பாண்டியராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மாவட்ட ஊராட்சி செயலர், கன்னியாகுமரி,பத்மனாபபுரம், குளச்சல், கொல்லங்கோடு, குழித்துறை நகராட்சி ஆணையர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory