» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கேரளாவில் முழு அடைப்பு: தமிழகப் பேருந்துகள் எல்லையில் நிறுத்தம் - பொதுமக்கள் அவதி!
வியாழன் 12, பிப்ரவரி 2026 3:12:37 PM (IST)

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தொழிலாளர் நல சட்டத் தொகுப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரளாவில் இன்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் எதிரொலியாக தமிழக-கேரள எல்லையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தினால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு தமிழக அரசுப் பேருந்துகள் கேரளாவுக்குள் செல்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து கேரளா நோக்கிச் செல்லும் அனைத்து தமிழகப் பேருந்துகளும் மாவட்ட எல்லையான களியக்காவிளை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.
கேரள அரசுப் பேருந்துகள் முழுமையாக இயங்காத நிலையில், தமிழகப் பேருந்துகளும் எல்லை வரை மட்டுமே செல்வதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். முக்கியமாக மருத்துவத் தேவைகளுக்காக திருவனந்தபுரம் செல்பவர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் அன்றாடத் தொழிலாளர்கள் எல்லையிலேயே இறக்கிவிடப்பட்டனர்.
களியக்காவிளையில் இருந்து கேரளா பகுதிக்குள் செல்ல ஆட்டோ அல்லது வாடகை வாகனங்கள் கிடைக்காததால், பல கிலோமீட்டர் தூரம் பொதுமக்கள் நடந்தே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி எல்லையோரப் பகுதிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நிலைமை சீரானதும் மீண்டும் முழுமையாகப் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இருசக்கர வாகனங்கள் மோதல்: பிளஸ்-1 மாணவி உயிரிழப்பு - வாலிபர் மீது வழக்குப்பதிவு!
வியாழன் 2, ஏப்ரல் 2026 8:47:28 AM (IST)

குமரி மாவட்டத்தில் முதல் நாளில் 15 பேர் மனுத் தாக்கல்: பத்மநாபபுரத்தில் மந்தம்!
செவ்வாய் 31, மார்ச் 2026 12:00:24 PM (IST)

பச்சிளம் குழந்தையைக் கொன்று முட்புதரில் வீசிய நர்சிங் மாணவி காதலனுடன் கைது: குமரியில் அதிர்ச்சி!
செவ்வாய் 31, மார்ச் 2026 11:27:31 AM (IST)

குமரியில் பறக்கும் படை சோதனை தீவிரம்: செலவின பார்வையாளர் சரண் ஜோஸ் ஆய்வு
செவ்வாய் 31, மார்ச் 2026 10:57:13 AM (IST)

எடப்பாடி பழனிசாமியின் பிரசார வாகனத்தில் திடீர் சோதனை: நாகர்கோவிலில் பரபரப்பு
திங்கள் 30, மார்ச் 2026 9:18:01 AM (IST)

ஆசாரிப்பள்ளம் பழமையான தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு வழிபாடு!
ஞாயிறு 29, மார்ச் 2026 10:57:23 AM (IST)

