» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

இருசக்கர வாகனங்கள் மோதல்: பிளஸ்-1 மாணவி உயிரிழப்பு - வாலிபர் மீது வழக்குப்பதிவு!

வியாழன் 2, ஏப்ரல் 2026 8:47:28 AM (IST)

வில்லுக்குறி அருகே இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், 16 வயது பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம்  தக்கலை அருகே மேக்காமண்டபம், மாறாங்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயன். இவர் தற்போது பனவிளை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது கடைசி மகள் அர்ச்சனா (16). இவர் தக்கலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு (பிளஸ்-1) படித்து வந்தார்.

கடந்த 30-ஆம் தேதி இரவு, அர்ச்சனா தனது இருசக்கர வாகனத்தில் நாகர்கோவிலுக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தார். வில்லுக்குறி அருகே வெள்ளச்சிவிளை என்ற பகுதியைச் சென்றடைந்தபோது, எதிரே அதிவேகமாக மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது. எதிர்பாராத விதமாகக் கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில் அர்ச்சனா தூக்கி வீசப்பட்டார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்குப்போராடிய அவரை, அங்கிருந்த பொதுமக்கள் மீட்டுச் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அர்ச்சனா ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார், விபத்தை ஏற்படுத்தியதாக வில்லுக்குறி மேலப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த ரெதீஷ் (21) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாகத் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பள்ளி மாணவி சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அர்ச்சனாவின் குடும்பத்தினரிடையேயும், அப்பகுதி மக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory