» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கலைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: ஆட்சியர் வழங்கினார்

புதன் 24, டிசம்பர் 2025 12:16:42 PM (IST)



குமரி மாவட்டத்தில் கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ மாணவியர்களுக்கிடையே நடைபெற்ற கலைப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் நல்லோசை – களமாடு – 2025 என்ற தலைப்பில் கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ மாணவியர்களுக்கிடையே நடைபெற்ற கலைப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் இன்று (24.12.2025) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, கலந்து கொண்டு, பல்வேறு கலைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி, கௌரவித்து பேசுகையில் -ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் தங்கிப்பயிலும் மாணவர்களின் கனவுகளை பற்றி தெரிந்து கொண்டு, கனவை அடைவதற்கான வழிமுறைகளை செய்வதற்காக நல்லோசை என்ற திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்வாயிலாக விடுதிகளில் உள்ள மாணவர்களின் தனித்திறமைகளை கண்டறிந்து அவர்களை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்ல முடியும். 

அதனடிப்படையில் நமது மாவட்டத்திற்குட்பட்ட சுசீந்திரம், நாகர்கோவில், திங்கள்நகர், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் காணப்படும் சமூகநீதி கல்லூரி மாணவியர் விடுதி மற்றும் நாகர்கோவில் அலகு-1, நாகர்கோவில் அலகு-2, தக்கலை ஆகிய பகுதிகளில் காணப்படும் சமூகநீதி கல்லூரி மாணவர் விடுதி மற்றும் கோணம் சமூகநீதி ஐ.டி.ஐ கல்லுரி மாணவர் விடுதி உள்ளிட்ட விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களின் கலை மற்றும் விளையாட்டு ஆகியவற்றில் தனித்திறமைகளை கண்டறிந்து வெளிப்படுத்தும் விதமாக நல்லோசை களமாடு எனும் பெயரில் கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. 

மேலும் மாணவர்களுக்கு போஸ்டர் உருவாக்கம், கவிதை எழுதுதல், பேச்சுப்போட்டி, ரங்கோலி போட்டி, கவிதை எழுதுதல், செஸ், ஓவியப்போட்டி, கைப்பந்து (Throw Ball), கையுந்து பந்து (Volley Ball), புகைப்படம் எடுத்தல், பேட்மிண்டன், நடனப்போட்டி, இசைக்கருவி வாசித்தல், ஓரங்க நாடகம், முகஓவியம், கைவினைப்பொருட்கள் தயாரித்தல் போட்டி, கதை எழுதுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் வெற்றிப்பெற்ற 176 மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

வெற்றி பெற்ற மாணவ மாணவியர்கள் மட்டுமல்லாது போட்டிகளில் கலந்து கொண்ட அனைவரும் இதுபோன்ற கலைப்போட்டிகளில் ஆர்வமுடன் பங்குபெற்று தங்களுடைய ஆளுமைத்திறனை வெளிக்கொணர்வதோடு விடுதிகளில் தங்கி பயில்கின்ற அனைத்து மாணவ மாணவியர்களும் மேலும் உயர்கல்வி பயின்று வாழ்வில் ஏற்றம் பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார். 

நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மோகனா, ஒருங்கிணைப்பாளர் ஆன்றோ, அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory