» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அடிதடி வழக்குகளில் தொடர்புடைய 2பேர் குண்டர் சட்டத்தில் கைது!
சனி 18, மே 2024 5:01:30 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொலை முயற்சி, அடிதடி வழக்குகளில் தொடர்புடைய 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நாகர்கோவில் புன்னை நகரை சேர்ந்தவர் நவீன்குமார் (30), தொழிலாளி. இவர் மீது நேசமணி நகர், கோட்டார் ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. எனினும் போலீசாரின் எச்சரிக்கையை மீறி இவர்கள் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் நவீன்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி சுந்தரவதனம் ஆட்சியர் ஸ்ரீதரிடம் பரிந்துரை செய்தார்.
அதனை ஆட்சியர் ஏற்றுக் கொண்டு நவீன்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதேபோல சரலூர் பகுதியை சேர்ந்த அஜய் கண்ணன் (23) என்பவர் மீது நேசமணி நகர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. அவரையும் எஸ்பி உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து 2பேரையும் போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்த ஆண்டில் மட்டும் குண்டர் சட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 23பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை..!
சனி 15, பிப்ரவரி 2025 5:44:14 PM (IST)

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மீனவருக்கு 20 ஆண்டு சிறை : நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு
சனி 15, பிப்ரவரி 2025 3:42:45 PM (IST)

கனிமவளங்களை கடத்த அரசே அனுமதி அளிப்பதா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!
சனி 15, பிப்ரவரி 2025 11:57:45 AM (IST)

கோழிக்கோடு சி.எஸ்.ஐ. தமிழ் ஆலய பிரதிஷ்டை விழா: குமரிப் பேராயர் செல்லையா பங்கேற்பு!
சனி 15, பிப்ரவரி 2025 8:32:14 AM (IST)

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் விடுதலை!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 5:48:59 PM (IST)

நாகர்கோவிலில் பிப்.19ம் தேதி 6வது புத்தகத் திருவிழா தொடக்கம் : ஆட்சியர் அழகுமீனா தகவல்
வியாழன் 13, பிப்ரவரி 2025 3:53:01 PM (IST)
