» சினிமா » செய்திகள்

உருவ கேலி: யூடியூபருக்கு நடிகை கௌரி கிஷன் பதிலடி!

வெள்ளி 7, நவம்பர் 2025 4:41:03 PM (IST)



நடிகை கௌரி கிஷனின் உடல் எடை குறித்த யூடியூபரின் கேள்விக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதெர்ஸ் படத்தின் செய்தியாளர் சந்திப்பில், நடிகை கௌரி கிஷனிடம் அவரது உடல் எடை குறித்து யூடியூபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், கௌரி கிஷனின் ஆணித்தரமான பதிலுக்கு பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

அதெர்ஸ் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் உடல் எடை குறித்த கேள்விக்கு, கௌரி கிஷன் என் உடல் எடையைத் தெரிந்து என்ன செய்யப்போகிறீர்கள்? ஒருவரை உடல்ரீதியாக அவமானப்படுத்துவது எல்லாம் கேள்வியா? நான் நடித்திருக்கும் திரைப்படம் குறித்து கேளுங்கள் என்று பதிலளித்தார்.

இதனையடுத்து, தமிழ் சினிமாவில் இப்படித்தான் கேள்விகள் இருக்கும். உங்களிடம் மோடியைப் பற்றியா கேட்க முடியும்? நடிகைகள் குஷ்பு, சரிதா என எல்லாரும் இக்கேள்வியை எதிர்கொண்டவர்கள்தான் என்று யூடியூபர் கூறினார்.

யூடியூபரின் கேள்வியால் ஆத்திரமான கௌரி கிஷன் ஒரு நடிகையின் உடல் எடையைத் தெரிந்துகொள்வது அநாகரீகமானதுதான். இது கேள்வியும் இல்லை; நீங்க பத்திரிகையாளரும் இல்லை. உங்கள் துறைக்கு அவமானத்தைத்தான் கொடுக்கிறீர்கள் என்று தெரிவித்தார்.

யூடியூபரின் கேள்விக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தனக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நடிகை கௌரி கிஷன் நன்றியும் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory