» சினிமா » செய்திகள்
ராஜமௌலியின் வாரணாசி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
வெள்ளி 30, ஜனவரி 2026 5:21:22 PM (IST)

வாரணாசி திரைப்படம் வரும் 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி அறிவித்துள்ளார்.
இந்திய திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான எஸ்.எஸ். ராஜமௌலியின் இயக்கத்தில் நடிகர் மகேஷ் பாபு நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் "வாரணாசி”. மிகப் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாள்முதல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
நடிகர்கள் பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் புதிய படத்திற்கு ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கின்றார்.
இந்தத் திரைப்படத்தின் வெளியீடு குறித்து சமூக ஊடகங்களில் வெவ்வேறு கருத்துகள் நிலவியதைத் தொடர்ந்து படக்குழுவினர் இன்று (ஜன. 30) மௌனம் கலைத்துள்ளனர்.
இந்த நிலையில், "வாரணாசி” திரைப்படம் வரும் 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி அறிவித்துள்ளார். மேலும், இப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசன் படப்பிடிப்புத் தளத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் திடீர் வருகை!
புதன் 26, ஆகஸ்ட் 2026 5:48:05 PM (IST)

யஷ் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் திடீர் விபத்து: 4 பேர் படுகாயம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 3:40:34 PM (IST)

கார் ரேஸில் விபத்து: நடிகர் அஜித் குமார் லேசான காயங்களுடன் தப்பினார்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 3:31:00 PM (IST)

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்: முதல்வர் விஜய் இரங்கல்
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 3:46:35 PM (IST)

ரஜினியின் ‘தர்மன்’ 2-ஆம் கட்ட படப்பிடிப்பு தொடக்கம்: வீடியோவை வெளியிட்ட படக்குழு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:55:30 PM (IST)

தொடர்ந்து செல்போன் பயன்படுத்தியதால் வந்த வினை - நடிகை ஷகிலா வேதனை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:42:45 PM (IST)