» சினிமா » செய்திகள்
மகேஷ் பாபு படத்தின் அப்டேட் கொடுத்த ராஜமவுலி!
சனி 9, ஆகஸ்ட் 2025 4:59:17 PM (IST)

நடிகர் மகேஷ் பாபுவின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு 'எஸ்எஸ்எம்பி 29' படத்தின் அப்டேட்டை இயக்குனர் ராஜமவுலி வெளியிட்டுள்ளார்.
ஆர்.ஆர்.ஆர் பட இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'எஸ்எஸ்எம்பி 29' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடாமல் ரகசியமாகவே உள்ளது.
இப்படம் ரூ. 1,000 கோடி பட்ஜெட்டில் உருவாவதாக கூறப்படுகிறது. இதில் பிருத்வி ராஜ், பிரியங்கா ஜோப்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த நிலையில், நடிகர் மகேஷ் பாபு இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்காக அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், மகேஷ் பாபுவின் பிறந்தநாளையொட்டி 'எஸ்எஸ்எம்பி 29' படத்தின் அப்டேட்டை இயக்குனர் ராஜமவுலி வெளியிட்டுள்ளார். அதில், கிளிம்ப்ஸ் புகைப்படத்தை வெளியிட்டு, படத்தின் முக்கிய அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியாகும் என்று பதிவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அழகாக பேசுபவர்கள் எல்லாம் முதல்வராக முடியாது: நடிகர் கிச்சா சுதீப் பேட்டி!!
புதன் 17, டிசம்பர் 2025 12:42:42 PM (IST)

ரெட்ட தல கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் கவரும்: அருண் விஜய் நம்பிக்கை!
புதன் 17, டிசம்பர் 2025 10:20:01 AM (IST)

மறுவெளியீட்டில் படையப்பா வசூல் வேட்டை?
திங்கள் 15, டிசம்பர் 2025 5:53:23 PM (IST)

எத்தனை சூப்பர் ஸ்டார் வந்தாலும் எம்.ஜி.ஆர்., தான் வாத்தியார்: நடிகர் கார்த்தி பேச்சு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:58:00 PM (IST)

மலேசியாவில் அஜித்தை சந்தித்தார் சிம்பு: சமூக வலைதளங்களிர் வைரல்!
திங்கள் 8, டிசம்பர் 2025 10:59:25 AM (IST)

பிரபுதேவா-வின் 'மூன்வாக்' படத்தில் 5 பாடல்களை பாடிய ஏ.ஆர்.ரகுமான்!
வியாழன் 4, டிசம்பர் 2025 11:20:25 AM (IST)

