» சினிமா » செய்திகள்
ஆக.2ல் ரஜினியின் கூலி இசை வெளியீட்டு விழா!
சனி 26, ஜூலை 2025 11:59:02 AM (IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஆக. 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது. படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது. ரூ. 400 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் வணிக ரீதியாக பல சாதனைகளைச் செய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
கூலி திரைப்படம் உலகளவில் 5000-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், இப்படத்தில், அமீர்கான், நாகர்ஜுனா, சத்யராஜ், பகத் பாசில், ஸ்ருதி ஹாசன், ரெபா மோனிகா ஜான் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
இந்த நிலையில், கூலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஆக. 2 ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அழகாக பேசுபவர்கள் எல்லாம் முதல்வராக முடியாது: நடிகர் கிச்சா சுதீப் பேட்டி!!
புதன் 17, டிசம்பர் 2025 12:42:42 PM (IST)

ரெட்ட தல கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் கவரும்: அருண் விஜய் நம்பிக்கை!
புதன் 17, டிசம்பர் 2025 10:20:01 AM (IST)

மறுவெளியீட்டில் படையப்பா வசூல் வேட்டை?
திங்கள் 15, டிசம்பர் 2025 5:53:23 PM (IST)

எத்தனை சூப்பர் ஸ்டார் வந்தாலும் எம்.ஜி.ஆர்., தான் வாத்தியார்: நடிகர் கார்த்தி பேச்சு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:58:00 PM (IST)

மலேசியாவில் அஜித்தை சந்தித்தார் சிம்பு: சமூக வலைதளங்களிர் வைரல்!
திங்கள் 8, டிசம்பர் 2025 10:59:25 AM (IST)

பிரபுதேவா-வின் 'மூன்வாக்' படத்தில் 5 பாடல்களை பாடிய ஏ.ஆர்.ரகுமான்!
வியாழன் 4, டிசம்பர் 2025 11:20:25 AM (IST)

