» சினிமா » செய்திகள்
மீண்டும் அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு: உறுதிபடுத்திய ஆதிக் ரவிச்சந்திரன்!
சனி 19, ஜூலை 2025 5:09:16 PM (IST)

குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு மீண்டும் அஜித் படத்தை இயக்க உள்ளதாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உறுதி படுத்தியுள்ளார்.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமார் கூட்டணியில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததுடன் வணிக ரீதியாகவும் ரூ. 250 கோடி வரை வசூலித்தது.இதனைத் தொடர்ந்து, அஜித்தின் அடுத்தபடம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்தன. ஏகே - 64 ஆக உருவாகும் இந்தப் படத்தின் இயக்குநர்களாக கார்த்திக் சுப்புராஜ், ஆதிக் ரவிச்சந்திரன் இருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், இன்று இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனிடம் அஜித்துடன் மீண்டும் இணைகிறீர்களா? எனக் கேட்கப்பட்டது. அதற்கு ஆதிக், "ஆம். நடிகர் அஜித் குமாரின் அடுத்த படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு அமைந்திருக்கிறது. குட் பேட் அக்லி படத்தைவிட வித்தியாசமான படமாக இது இருக்கும். படக்குழு குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இயக்குநருடன் விஷால் மோதல் எதிரொலி : மகுடம் படப்பிடிப்பு நிறுத்தம்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 3:36:30 PM (IST)

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் வித்யா பாலன்!
புதன் 29, அக்டோபர் 2025 12:38:59 PM (IST)

போலி ஆடிஷன் அழைப்புகள்: இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் நிறுவனம் எச்சரிக்கை!
புதன் 29, அக்டோபர் 2025 11:55:44 AM (IST)

தமிழில் இயக்குநராக அறிமுகமாகும் குக் வித் கோமாளி பிரபலம்!
புதன் 29, அக்டோபர் 2025 11:03:27 AM (IST)

கபாலி வெளியீட்டுக்கு முன்பே ரூ.100 கோடி லாபம்: பா.ரஞ்சித் பேச்சு!
திங்கள் 27, அக்டோபர் 2025 3:34:45 PM (IST)

ஆயிரத்தில் ஒருவன் படத்தை கொண்டாடுவதில் மகிழ்ச்சி இல்லை: செல்வராகவன் ஆதங்கம்
சனி 25, அக்டோபர் 2025 3:48:52 PM (IST)

