» சினிமா » செய்திகள்

படப்பிடிப்பு விபத்தில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் உயிரிழப்பு: சரத்குமார் இரங்கல்!

புதன் 16, ஜூலை 2025 12:11:43 PM (IST)



படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்தில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் உயிரிழந்த சம்பவத்திற்கு நடிகர் சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாகை மாவட்டம், விழுந்தமாவடியில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'வேட்டுவம்' படத்தில், கார் சேசிங் காட்சிகள் படமாக்கப்பட்ட போது, சண்டை பயிற்சியாளர் திரு.மோகன்ராஜ் இயக்கிய கார் விபத்துக்குள்ளாகி, அவர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

ஸ்டண்ட் கலைஞர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து படக்காட்சிகளில், திரைக்கு பின்னால் கடுமையாக உழைக்கிறார்கள். சாகச கலைஞர்களுக்கு மட்டுமல்ல, சினிமா துறையில் பணிபுரியும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் மருத்துவ காப்பீடு வசதி, முதல் உதவிக்காக அவசர சிகிச்சை வாகனம் (Ambulance), பாராமெடிக்கல் குழு என தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் படப்பிடிப்பு நடத்தப்பட வேண்டும் என பலமுறை கருத்து தெரிவிக்கப்பட்டு, வலியுறுத்தப்பட்டு வருகிறது. 

மிகப்பெரிய ஆபத்து காட்சி படமாக்கும் போதுகூட, இனி இது போன்ற விபத்துகள் நேரிடாமல் தவிர்க்க, அனைத்துவித மருத்துவ, அவசர சிகிச்சை வழங்கும் வசதி வழங்கி, கலைஞர்களின் உயிர் பாதுகாப்பிற்கு நம்பிக்கை அளிக்க வேண்டும். வெளிநாடுகளில் படப்பிடிப்பு எடுக்கும் போது இத்தகைய வசதிகள் உள்ளதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 

துரதிர்ஷ்டவசமாக படப்பிடிப்பு தளத்தில் உயிரிழந்த மோகன்ராஜ் குடும்பத்தார்க்கும், சாகச கலைஞர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு, அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்." என்று அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory