» சினிமா » செய்திகள்
இந்தியன் 3ஆம் பாகத்தை சரிசெய்வேன்: இயக்குனர் ஷங்கர்
வியாழன் 19, டிசம்பர் 2024 4:01:50 PM (IST)

இந்தியன் - 2 படத்திற்குக் கிடைத்த எதிர்மறையான விமர்சனங்கள் அதிர்ச்சியளித்தன. 3ஆம் பாகத்தை சரிசெய்வேன் என்று இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'இந்தியன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஜூலை மாதம் வெளியானது. இந்த படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.லைகா புரொடக்சன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
லஞ்சம் மற்றும் ஊழலை மையமாகக் கொண்டு உருவான இப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. 'இந்தியன் 2' படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் கிடைத்தாலும், 'இந்தியன் 3' படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. 'இந்தியன் 3' படத்தை நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓ.டி.டியில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இதற்கிடையில் இயக்குநர் ஷங்கர் 'இந்தியன் 3' படத்தில் ஏற்கனவே படம்பிடிக்கப்பட்ட காட்சிகளில், ஒரு சில மாற்றத்தை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக கமல்ஹாசனிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். மீண்டும் ஒரு சில நாள்களில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், நேர்காணலில் பங்கேற்ற இயக்குநர் ஷங்கர், "இந்தியன் - 2 படத்திற்குக் கிடைத்த எதிர்மறையான விமர்சனங்கள் அதிர்ச்சியளித்தன. அதைக் கருத்தில்கொண்டு 'இந்தியன் 3' படத்தை சரிசெய்வேன். மூன்றாவது பாகம் திரையரங்குகளில்தான் வெளியாகும்" எனத் தெரிவித்துள்ளார்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொன்னியின் செல்வன் பாடல் வழக்கு: ஏ.ஆர்.ரகுமான் ரூ.2 கோடி செலுத்த இடைக்காலத் தடை!
செவ்வாய் 6, மே 2025 12:33:56 PM (IST)

விராட் கோலிக்கு பிடித்த தமிழ் பாடல்..!
வெள்ளி 2, மே 2025 4:44:55 PM (IST)

யூடியூபர் விஜே சித்து இயக்கி, நடிக்கும் டயங்கரம்!
வெள்ளி 2, மே 2025 4:09:40 PM (IST)

இன்னும் 20 ஆண்டுகள் மோடி இந்தியாவை ஆள வேண்டும் இளையராஜா கருத்து
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 12:39:05 PM (IST)

இந்தியர்களுக்குள் ஒற்றுமை அவசியம்: நடிகர் அஜித் குமார் வலியுறுத்தல்
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 11:13:20 AM (IST)

ஜெயிலர் 2: மீண்டும் ரஜினியுடன் இணையும் ஃபகத் ஃபாசில்!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 5:10:24 PM (IST)
