» சினிமா » செய்திகள்
திரைப்பட விமர்சனங்களைத் தடை செய்ய முடியாது: உயர்நீதிமன்றம்
செவ்வாய் 3, டிசம்பர் 2024 4:20:55 PM (IST)
புதிய படங்கள் வெளியான முதல் 3 நாள்களுக்கு திரைப்பட விமர்சனங்களைத் தடை செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கங்குவா திரைப்படத்திற்குக் கிடைத்த மிக மோசமான விமர்சனங்களால் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் புதிய படங்கள் வெளியான முதல் மூன்று நாள்களுக்கு விமர்சனங்களைத் தடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தது. இதுகுறித்து விசாரணை இன்று நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதி சவுந்தர், விமர்சனங்கள் கருத்து சுதந்திரம் என்பதால் பொத்தாம் பொதுவாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என கூறி விமர்சனத்தை முறைப்படுத்த விதிகள் வகுக்கக் கோரிய வழக்கில் ஒன்றிய, மாநில அரசுகள், யூடியூப் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.
மேலும், அவதூறு பரப்புவது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார். திரைப்படங்கள் வெளியான 3 நாட்களுக்கு விமர்சனங்கள் வெளியிட தடைவிதிக்க, சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததற்கு சமூக வலைதளங்களில் வரவேற்பு கிடைத்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் பிறந்தநாளில் ஜன நாயகன் அப்டேட்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
வெள்ளி 20, ஜூன் 2025 8:28:02 PM (IST)

ஆர்.ஜே. பாலாஜி - சூர்யா படத்தின் டைட்டில் அறிவிப்பு
வெள்ளி 20, ஜூன் 2025 11:02:22 AM (IST)

கூலி திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமம் ரூ.81 கோடிக்கு விற்பனை
புதன் 18, ஜூன் 2025 4:29:29 PM (IST)

நெல் ஜெயராமனின் மகன் படிப்பு செலவை ஏற்றுள்ள சிவகார்த்திகேயன்..!
புதன் 18, ஜூன் 2025 3:43:56 PM (IST)

இரண்டாவது திருமணம் செய்து மோசடி: பிரபல சின்னத்திரை நடிகை மீது மோசடி புகார்!
திங்கள் 16, ஜூன் 2025 5:44:50 PM (IST)

ரஜினிக்காக கூலி படத்தில் நடித்தேன்: அமீர் கான்
வியாழன் 12, ஜூன் 2025 12:45:08 PM (IST)
