» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
கோவில்பட்டியில் மாநில ஆக்கிப் போட்டி: சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை!
வெள்ளி 15, மே 2026 8:32:25 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணைய கோப்பைக்கான மாநில சீனியர் ஆண்கள் ஆக்கி சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.
கோவில்பட்டி கிருஷ்ணாநகர் செயற்கை புல்வெளி ஆக்கி மைதானத்தில் கடந்த 9-ஆம் தேதி இந்தப் போட்டிகள் தொடங்கின. இதில் தமிழகத்தின் 32 மாவட்டங்களில் இருந்து சிறந்த அணிகள் கலந்துகொண்டன. லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன.
முதல் அரையிறுதி: சென்னை மாவட்ட அணியும், தூத்துக்குடி மாவட்ட அணியும் மோதின. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 3-3 என சமநிலை பெற்றன. பின்னர் நடத்தப்பட்ட 'சூட்-அவுட்' முறையில் 7-5 என்ற கோல் கணக்கில் சென்னை அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இரண்டாவது அரையிறுதி: அரியலூர் மாவட்ட அணி 5-3 என்ற கோல் கணக்கில் தஞ்சாவூர் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. மாலை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சென்னை மற்றும் அரியலூர் மாவட்ட அணிகள் மோதின. ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய சென்னை அணி 5-1 என்ற கோல் கணக்கில் அரியலூர் அணியை வீழ்த்தி, "வ.உ.சி. துறைமுக ஆணைய கோப்பையை" கைப்பற்றி சாம்பியன் ஆனது.
வெற்றி பெற்ற வீரர்களுக்குப் பரிசளிக்கும் விழா தமிழ்நாடு ஆக்கி கழக பொதுச்செயலாளர் செந்தில் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. வ.உ.சி. துறைமுக ஆணைய விளையாட்டுக்கழக பொதுச்செயலாளர் எம்.ஆர். தமிழ்ச்செல்வன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற சென்னை அணிக்கும், இரண்டாம் இடம் பிடித்த அரியலூர் அணிக்கும் கோப்பைகளை வழங்கிப் பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆக்கி கழகப் பொருளாளர் சேவியர் ஜோதி சற்குணம், தொழில் நுட்ப கமிட்டி செயலர் மோகன் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தூத்துக்குடி ஆக்கி கழகச் செயலாளர் குருசித்திரசண்முகபாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வி : பஞ்சாப் அணியின் பிளே-ஆப் வாய்ப்பில் சிக்கல்!
வெள்ளி 15, மே 2026 3:34:37 PM (IST)

சிஎஸ்கே பிளே-ஆப் செல்லுமா? கணிப்புகளும் - வெற்றி வாய்ப்புகளும்!
வெள்ளி 15, மே 2026 12:34:40 PM (IST)

நெருக்கடியான தருணங்களே என்னைச் செதுக்குகின்றன: விராட் கோலி நெகிழ்ச்சி!
வியாழன் 14, மே 2026 4:58:29 PM (IST)

மாநில சீனியர் ஹாக்கி: நெல்லை, கோவை அணிகள் வெளியேற்றம்!
புதன் 13, மே 2026 8:10:56 AM (IST)

மில்லர் - அக்சர் அதிரடி: பஞ்சாப்பை வீழ்த்தியது டெல்லி!
செவ்வாய் 12, மே 2026 12:22:26 PM (IST)

மாநில சீனியர் ஆண்கள் ஆக்கி போட்டி: நெல்லை, தூத்துக்குடி உள்பட 8 அணிகள் காலிறுதிக்கு தகுதி
செவ்வாய் 12, மே 2026 8:07:02 AM (IST)


