» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
மகளிர் ஐபிஎல் 2026 அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் மும்பை-பெங்களூரு மோதல்!
சனி 29, நவம்பர் 2025 5:20:14 PM (IST)

4-வது மகளிர் பிரீமியர் லீக் போட்டிக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) இன்று வெளியிட்டது.
மகளிர் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும் டபிள்யூ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 2023-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.5 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் 2 முறையும் (2023, 2025), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஒரு தடவையும் (2024) சாம்பியன் பட்டம் பெற்றன.
4-வது மகளிர் பிரீமியர் லீக் போட்டிக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) இன்று வெளியிட்டது. அதன்படி இந்தப் போட்டி ஜனவரி 9-ந்தேதி தொடங்கி பிப்ரவரி 5-ந் தேதி வரை நடக்கிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி முன்னாள் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர் கொள்கிறது. நவி மும்பையில் உள்ள டி.ஒய். படேல் ஸ்டேடியத்தில் தொடக்க போட்டி நடக்கிறது.
நவி மும்பையில்
ஜனவரி 9: மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ஜனவரி 10: யுபி வாரியர்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்
ஜனவரி 11: டெல்லி கேபிடல்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ்
ஜனவரி 12: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs யுபி வாரியர்ஸ்
ஜனவரி 13: மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ்
ஜனவரி 14: யுபி வாரியர்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்
ஜனவரி 15: மும்பை இந்தியன்ஸ் vs யுபி வாரியர்ஸ்
ஜனவரி 16: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் ஜெயண்ட்ஸ்
ஜனவரி 17: யுபி வாரியர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு.
வதோதராவில்:
ஜனவரி 19: குஜராத் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ஜனவரி 20: டெல்லி கேபிடல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
ஜனவரி 22: குஜராத் ஜெயண்ட்ஸ் vs யுபி வாரியர்ஸ்
ஜனவரி 24: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேபிடல்ஸ்
ஜனவரி 26: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ்
ஜனவரி 27: குஜராத் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்
ஜனவரி 29: யுபி வாரியர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ஜனவரி 30: குஜராத் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
பிப்ரவரி 1: டெல்லி கேபிடல்ஸ் vs யுபி வாரியர்ஸ்
பிப்ரவரி 3: எலிமினேட்டர்
பிப்ரவரி 5: இறுதிப் போட்டி
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாஷிங்டன் சுந்தர் விலகல்: இந்திய அணியில் இணையும் மாற்று வீரர்...!
செவ்வாய் 13, ஜனவரி 2026 11:40:51 AM (IST)

விராட் கோலி புதிய சாதனை: முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா ‘திரில்’ வெற்றி
திங்கள் 12, ஜனவரி 2026 8:25:58 AM (IST)

எதிர்கால நலனை கருத்தில் கொண்டு வங்காளதேசம் முடிவெடுக்க வேண்டும்: தமிம் இக்பால்
வெள்ளி 9, ஜனவரி 2026 4:39:06 PM (IST)

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர்: இந்திய அணி அறிவிப்பு
ஞாயிறு 4, ஜனவரி 2026 12:03:19 PM (IST)

வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மானை விடுவிக்க கேகேஆர் அணிக்கு பிசிசிஐ அதிரடி உத்தரவு!
சனி 3, ஜனவரி 2026 5:42:48 PM (IST)

ஆஸி. மண்ணில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தின் முதல் வெற்றி!
சனி 27, டிசம்பர் 2025 3:51:10 PM (IST)

