» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
டி20 உலகக்கோப்பையில் ஹாரி புரூக் வரலாற்றுச் சாதனை: பாகிஸ்தானை வீழ்த்தியது இங்கிலாந்து!
புதன் 25, பிப்ரவரி 2026 10:23:25 AM (IST)

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-8 சுற்று ஆட்டத்தில், பாகிஸ்தான் அணிக்கு எதிராக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் அதிரடி சதம் விளாசி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி, ஹாரி புரூக்கின் அதிரடியால் 19.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து, 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக், டி20 உலகக்கோப்பை வரலாற்றில் சதம் அடித்த முதல் கேப்டன் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். 50 பந்துகளில் சதம் கடந்தார். இவரது அதிரடி ஆட்டத்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.
இந்த சதத்தின் மூலம், கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) சதம் அடித்த 3-வது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை புரூக் பெற்றுள்ளார்.
ஜோஸ் பட்லர் (முதல் வீரர்)
டேவிட் மலான் (இரண்டாம் வீரர்)
ஹாரி புரூக் (மூன்றாம் வீரர்)
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐசிசி தரவரிசை: பும்ராவைப் பின்னுக்குத் தள்ளி மிட்செல் ஸ்டார்க் முதலிடம்!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:50:56 PM (IST)

சுதர் சுழலில் சிக்கிய இலங்கை: காலே டெஸ்ட்டில் 165 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!
புதன் 19, ஆகஸ்ட் 2026 3:42:33 PM (IST)

வெறும் ₹100-க்கு ஜாம்ஷெட்பூர் கால்பந்து கிளப்பை விற்பனை செய்த டாடா ஸ்டீல்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 5:24:48 PM (IST)

வயது முக்கியமல்ல, திறமைதான் முக்கியம்: வைபவ் சூர்யவன்ஷிக்கு பிரெட் லீ பாராட்டு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 4:14:44 PM (IST)

காமன்வெல்த் விளையாட்டு: மும்முறை தாண்டுதல் பிரிவில் பதக்கம் வென்று தமிழக வீரர்கள் அசத்தல்!
சனி 1, ஆகஸ்ட் 2026 4:59:47 PM (IST)

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஜின்கியா ரஹானே ஓய்வு: வீடியோ வெளியிட்டு உருக்கம்!
வியாழன் 30, ஜூலை 2026 4:44:14 PM (IST)


