» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டி : போர்ச்சுகல் அணி சாம்பியன்!
சனி 29, நவம்பர் 2025 11:38:37 AM (IST)

யு-17 உலகக் கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரியாவை வீழ்த்தி, போர்ச்சுகல் இளையோர் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது.
கத்தாரின் தோஹா நகரில் 17 வயதுக்கு உட்பட்டோர் மோதும், இளையோர் உலக கால்பந்தாட்ட போட்டிகள் நடந்து வந்தன. இதில் 48 அணிகள் மோதின. முதல் 3 இடங்களை ஐரோப்பாவை சேர்ந்த நாடுகள் பிடித்தன.
இந்நிலையில், தோஹா நகரில் நடந்த இறுதிப் போட்டியில் போர்ச்சுகல் - ஆஸ்திரியா அணிகள் மோதின. போட்டியின் துவக்கம் முதல் ஆக்ரோஷமாக ஆடிய போர்ச்சுகல் அணி வீரர்கள் கோல் போடுவதில் முனைப்பு காட்டினர். போட்டியின் 32வது நிமிடத்தில் அந்த அணியின் அனிஸியோ கேப்ரால் அட்டகாசமாக ஆடி கோல் அடித்து தனது அணியை முன்னிலைப் படுத்தினார். இந்த தொடரில் அவர் போடும் 7வது கோலாக அது அமைந்தது.
அதன் பின், இரு அணி வீரர்கள் எவ்வளவு முயன்றபோதும் கோல் போட முடியவில்லை. அதனால், 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. ஃபிபா யு-17 கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகளில் போர்ச்சுகல் அணி வெல்லும் முதல் பட்டம் இது. முன்னதாக 3ம் இடத்துக்கு நடந்த போட்டியில் இத்தாலி - பிரேசில் அணிகள் மோதின.
கடைசி வரை எந்த அணியும் கோல் போடாததால், பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. இதில் சிறப்பாக செயல்பட்ட இத்தாலி அணி, 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி வாகை சூடி 3ம் இடத்தை பிடித்தது. அந்த அணியின் கோல் கீப்பர் அலெசாண்ட்ரோ லோங்கோனி, 2 கோல்களை அற்புதமாக தடுத்ததால் இந்த வெற்றி சாத்தியப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாஷிங்டன் சுந்தர் விலகல்: இந்திய அணியில் இணையும் மாற்று வீரர்...!
செவ்வாய் 13, ஜனவரி 2026 11:40:51 AM (IST)

விராட் கோலி புதிய சாதனை: முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா ‘திரில்’ வெற்றி
திங்கள் 12, ஜனவரி 2026 8:25:58 AM (IST)

எதிர்கால நலனை கருத்தில் கொண்டு வங்காளதேசம் முடிவெடுக்க வேண்டும்: தமிம் இக்பால்
வெள்ளி 9, ஜனவரி 2026 4:39:06 PM (IST)

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர்: இந்திய அணி அறிவிப்பு
ஞாயிறு 4, ஜனவரி 2026 12:03:19 PM (IST)

வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மானை விடுவிக்க கேகேஆர் அணிக்கு பிசிசிஐ அதிரடி உத்தரவு!
சனி 3, ஜனவரி 2026 5:42:48 PM (IST)

ஆஸி. மண்ணில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தின் முதல் வெற்றி!
சனி 27, டிசம்பர் 2025 3:51:10 PM (IST)

