» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஜெய்ஸ்வால் அபார சதம்.. வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் இந்தியா ரன்குவிப்பு!

வெள்ளி 10, அக்டோபர் 2025 5:45:22 PM (IST)



வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் 173 ரன்கள் குவித்து களத்தில் உள்ளார். முதல் நாள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டை இழந்து 318 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்குமான முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டிக்கான டாசில் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து இந்தியாவின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கே.எல்.ராகுல் களம் கண்டனர்.

இதில் ராகுல் 38 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து சாய் சுதர்சன் களம் கண்டார். சுதர்சன் - ஜெய்ஸ்வால் இணை நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது. இந்த இணையை பிரிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் திணறினர். நிதானமாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் சுதர்சன் 87 ரன்னில் அவுட் ஆனார். 

இதையடுத்து சுப்மன் கில் களம் இறங்கினார். மறுபுறம் சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் முதல் நாள் முடிவில் இந்திய அணி 90 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 318 ரன்கள் குவித்துள்ளது. இந்தியா தரப்பில் ஜெய்ஸ்வால் 173 ரன்னுடனும், சுப்மன் கில் 20 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜோமல் வாரிகன் 2 விக்கெட் வீழ்த்தினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory