» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

சனி 4, அக்டோபர் 2025 4:22:32 PM (IST)



ஆஸ்திரேலியாவில்  3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்கள் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பெர்த்தில் வருகிற 19-ம் தேதியும், 2-வது ஒருநாள் போட்டி அடிலெய்டில் 23-ம் தேதியும், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சிட்னியில் 25-ம் தேதியும் நடக்கிறது. 

இதனை தொடர்ந்து டி20 போட்டிகள் அக்டோபர் 29-ம் தேதி முதல் நவம்பர் 6-ம் தேதி வரை நடக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிக்கு சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

டி20 மற்றும் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்று விட்ட ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பைக்கு பிறகு ஒருநாள் போட்டிக்கான அணிக்கு திரும்பியிருக்கிறார்கள்.

ஒருநாள் போட்டி வீரர்களின் பட்டியல்

சுப்மன் கில் (கேப்டன்)

ரோகித் சர்மா

விராட் கோலி

ஸ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்)

அக்சர் படேல், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), 

நிதிஷ் குமார் ரெட்டி, 

வாஷிங்டன் சுந்தர்

குல்தீப் யாதவ்

ஹர்சித் ராணா

முகமது சிராஜ்

அர்ஷ்தீப் சிங்

பிரசித் கிருஷ்ணா

துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்)

யஷஸ்வி ஜெய்ஸ்வால்.

டி20 வீரர்களின் பட்டியல்

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்) 

அபிஷேக் ஷர்மா

ஷுப்மன் கில் (துணை கேப்டன்) 

திலக் வர்மா

நிதீஷ் குமார் ரெட்டி 

ஷிவம் துபே

அக்சர் படேல்

ஜிதேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்)

வருண் சக்ரவர்த்தி

ஜஸ்பிரித் பும்ரா 

அர்ஷ்தீப் சிங்

குல்தீப் யாதவ்

ஹர்ஷித் ராணா 

சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்)

ரிங்கு சிங்

வாஷிங்டன் சுந்தர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory