» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆமதாபாத் வெஸ்ட் : கேஎல் ராகுல், ஜூரெல், ஜடேஜா சதம்; இந்திய அணி ரன் குவிப்பு

வெள்ளி 3, அக்டோபர் 2025 5:21:42 PM (IST)



வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கேஎல் ராகுல், ஜடேஜா, ஜூரெல் சதம் அடித்து அசத்த இந்திய அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 448 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிஆமதாபாத் மைதானத்தில் நேற்று (அக்.,2) தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் பேட்டர்கள் இந்திய அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர். சாய் ஹோப் (26), கேப்டன் சேஸ் (24), க்ரீவ்ஸ் (32) ஆகியோர் மட்டுமே சிறிதுநேரம் தாக்கு பிடித்தனர். சீரான இடைவேளையில் விக்கெட்டுகள் சரிந்ததால் வெஸ்ட் இண்டீஸ் அணி 162 ரன்னுக்கு ஆல்அவுட்டானது. இந்திய அணி தரப்பில் சிராஜ் 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து இந்திய அணி பேட்டிங்கை துவக்கியது. துவக்க வீரர் ஜெய்ஸ்வால் 36 ரன்களுக்கும், சாய் சுதர்சன் 7 ரன்னுக்கும் அவுட்டாகினர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன் எடுத்து விளையாடி வருகிறது. கேஎல் ராகுல் (53), கேப்டன் சுப்மன் கில் (18) ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

2ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியதும் கேப்டன் கில் அரைசதம் எடுத்து அவுட்டானார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய கேஎல் ராகுல் சதம் அடித்தார். அவருடன் துருவ் ஜூரேல் விளையாடி வருகிறார். உணவு இடைவேளை வரை இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்திருந்தது.

மீண்டும் போட்டி தொடங்கியதும் கேஎல் ராகுல் 100 ரன்னில் அவுட்டானார். அதன்பிறகு, ஜோடி சேர்ந்த துணை கேப்டன் ஜடேஜா மற்றும் ஜூரெல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினர். ஜூரெல் 125 ரன்களில் அவுட்டானார். ஜடேஜாவும் சதமடித்தார். அவர் 104 ரன்களுடன் களத்தில் உள்ளார்.2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 448 ரன்கள் எடுத்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory