» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சிராஜ், கே.எல்.ராகுல் அசத்தல்: மே.இ. தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபாரம்!

வியாழன் 2, அக்டோபர் 2025 8:32:17 PM (IST)


மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாதில் இன்று (அக்டோபர் 2) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, முதல் இன்னிங்ஸில் 162 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி 4-ஆவது ஓவரில் முதல் விக்கெட்டைப் பறிகொடுத்தது. அடுத்து, தொடர்ச்சியாக 7,10,12-ஆவது ஓவர்களில் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இந்தியாவின் சார்பில் முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளும் பும்ரா 1 விக்கெட்டும் எடுத்துள்ளார்கள்.

இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். இருப்பினும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 54 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

அதில் 7 பவுண்டரிகள் அடங்கும். சாய் சுதர்சன் 7 ரன்களில் ஆட்டமிழக்க, கே.எல்.ராகுல் மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நிதானமாக விளையாடி ரன்கள் குவித்து வருகிறது. நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல்.ராகுல் அரைசதம் கடந்து அசத்தினார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் எடுத்துள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜேடன் சீல்ஸ் மற்றும் கேப்டன் ராஸ்டன் சேஸ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர கே.எல்.ராகுல் 53 ரன்களுடனும், கேப்டன் ஷுப்மன் கில் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory