» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

குல்தீப், திலக் அபாரம்: பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய கோப்பையை வென்றது இந்தியா!

திங்கள் 29, செப்டம்பர் 2025 8:42:03 AM (IST)



ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி வாகை சூடியது. இதன் மூலம் 9வது முறையாக ஆசிய கோப்பை இந்தியா கைப்பற்றியுள்ளது.

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. பாகிஸ்தான் அணிக்காக சாஹிப்ஸாதா ஃபர்ஹான் மற்றும் பஹர் ஸமான் இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர்.

இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த இன்னிங்ஸில் 35 பந்துகளில் அரைசதம் விளாசினார் ஃபர்ஹான். வருண் சக்கரவர்த்தி வீசிய முதல் இன்னிங்ஸின் 10-வது ஓவரில் ஃபர்ஹான் ஆட்டமிழந்தார். அவர் 38 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து வெளியேறினார். 5 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களை அவர் விளாசினார்.

அதன் பிறகு பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தது. சயிம் அயூப் 14, முகமது ஹாரிஸ் 0, ஸமான் 46, ஹுசைன் தலாத் 1, கேப்டன் சல்மான் அலி ஆகா 8, ஷாஹீன் ஷா அப்ரிடி 0, பஹீம் அஷ்ரப் 0, ஹாரிஸ் ரவூஃப் 6, முகமது நவாஸ் 6 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.

19.1 ஓவர்களில் 146 ரன்கள் எடுத்த நிலையில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4, வருண் சக்ரவர்த்தி 2, அக்சர் 2, பும்ரா 2 விக்கெட் கைப்பற்றினர்.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற 147 ரன்கள் தேவை என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. முதலில் இந்திய அணி மோசமான தொடக்கத்தையே பெற்றது. நான்கு ஓவர்களில் மூன்று பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தனர். அபிஷேக் சர்மா 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் தந்தார். மறுமுனையில் ஆடிய ஷுப்மன் கில் 12 ரன்களுடன் வெளியேறினார். கேப்டன் சூர்யகுமார் ஒரே ரன்னில் ஆட்டமிழந்து நடையை கட்டினார். 

சஞ்சு சாம்சன் 24 ரன்களில் ஃபர்ஹானிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஆனால், திலக் வர்மா 53 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் எடுத்தார். அடுத்து இறங்கிய ஷிவம் டூபே 33 ரன்கள் எடுத்தார். ரிங்கு சிங் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார். 

19.5 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது. இதனால் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 9 முறை சாம்பியன் பட்டம் (1984, 1988, 1990, 1995, 2010, 2016, 2018, 2023, 2025) வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory