» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
சாய் சுதர்சன், கே.எல். ராகுல் அபாரம் : 412 இலக்கை விரட்டி இந்தியா ஏ அணி சாதனை!
வெள்ளி 26, செப்டம்பர் 2025 5:08:30 PM (IST)

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் 412 இலக்கை விரட்டி வெற்றியைப் பெற்று, இந்தியா ஏ அணி தொடரைக் கைப்பற்றியது.
இந்தியா- ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையில் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடர் நடைபெற்றது. 2ஆவது டெஸ்ட் லக்னோவில் கடந்த 23ஆம் தேதி தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஏ முதல் இன்னிங்சில் 420 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஏ 194 ரன்களில் சுருண்டது. சாய் சுதர்சன் மட்டும் தாக்குப்பிடித்து 75 ரன்கள் அடித்தார்.
பின்னர் 226 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா ஏ 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. குர்னூர் பிரார், மனாவ் சுதர் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், முகமது சிராஜ் மற்றும் யாஷ் தாகூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்த ஆஸ்திரேலியா ஏ 2ஆவது இன்னிங்சில் 185 ரன்னில் சுருண்டது. இதனால் ஆஸ்திரேலியா ஏ 411 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
பின்னர் 412 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஏ அணி களம் இறங்கியது. நேற்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா ஏ 2 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்திருந்தது, சாய் சுதர்சன் 44 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இன்று 4ஆவது நாள் மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. சாய் சுதர்சனுடன் இணைந்து கே.எல். ராகுல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சாய் சுதர்சன் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். துருவ் ஜுரெல் 56 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
கே.எல். ராகுல் 176 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க இந்தியா ஏ அணி 91.3 ஓவரில் 413 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில், 2ஆவது போட்டியில் இந்தியா ஏ அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வருகிற 30ஆம் தேதி தொடங்குகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்தியா: 256 ரன்கள் குவித்து அபார வெற்றி!
வெள்ளி 27, பிப்ரவரி 2026 10:41:35 AM (IST)

டி20 உலகக்கோப்பையில் ஹாரி புரூக் வரலாற்றுச் சாதனை: பாகிஸ்தானை வீழ்த்தியது இங்கிலாந்து!
புதன் 25, பிப்ரவரி 2026 10:23:25 AM (IST)

டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு - தென்னாப்பிரிக்க அணியின் கையில்!
செவ்வாய் 24, பிப்ரவரி 2026 12:08:04 PM (IST)

பேட்டிங் சொதப்பல்: சூப்பர் 8 சுற்றில் தென் ஆப்பிரிக்காவிடம் இந்திய அணி தோல்வி!
திங்கள் 23, பிப்ரவரி 2026 10:33:50 AM (IST)

இந்தியா அரையிறுதி சுற்றுக்கு செல்லாது : முன்னாள் பாகிஸ்தான் வீரர் கணிப்பு
சனி 21, பிப்ரவரி 2026 11:16:54 AM (IST)

ஐசிசி தொடர்களில் தொடர்ச்சியாக 17 வெற்றிகள்: புதிய உலக சாதனை படைத்தது இந்தியா!
வியாழன் 19, பிப்ரவரி 2026 10:13:45 AM (IST)

