» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கோவில்பட்டியில் மாநில அளவிலான ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி தொடக்கம்!

வியாழன் 24, ஜூலை 2025 12:21:34 PM (IST)



கோவில்பட்டியில் ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு மற்றும் ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி இணைந்து நடத்தும் மாநில அளவிலான ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி கோவில்பட்டியில் நேற்று தொடங்கியது. 

துவக்க விழாவில் கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் போட்டியான திருப்பூர் - ராணிப்பேட்டை இடையிலான போட்டியை துவக்கி வைத்தார்.  துவக்க விழாவிற்கு பள்ளியின் செயலாளர் வழக்கறிஞர் ரத்தின ராஜா தலைமை தாங்கினார். 

இதில் நாடார் உறவின்முறை சங்க துணைத் தலைவர் செல்வராஜ், செயலாளர் ஜெயபாலன், பொருளாளர் சுரேஷ்குமார், தர்மகர்த்தா மாரியப்பன், நாடார் மேல்நிலைப்பள்ளி பொருளாளர் விஜயகுமார், செயற்குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், சாமி ராஜன், வேல்முருகன்,  ரவி, வெங்கடேஷ் தலைமையாசிரியர் அருணாச்சலம் ஆகியோர் கலந்து கொண்டனர் 

சிறப்பு விருந்தினர்களை  போட்டியின் ஒருங்கிணைப்பாளர் குரு சித்திர சண்முக பாரதி,  காளிமுத்து பாண்டிராஜா, தூத்துக்குடி துறைமுக ஹாக்கி பயிற்சியாளர் ராஜாகுமார் ஆகியோர் வரவேற்று  வீரர்களை அறிமுகம் செய்து வைத்தனர். நாடார் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் சசிகுமார், கூத்து ராஜன், ராம்குமார், வேல்முருகன், மகேஸ்வரி, உமாதேவி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory