» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து நிதீஷ் குமார் ரெட்டி விலகல்!

திங்கள் 21, ஜூலை 2025 7:50:28 PM (IST)



காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான நிதீஷ் குமார் ரெட்டி விலகுகிறார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை 3 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நாளை மறுநாள் (ஜூலை 23) தொடங்குகிறது.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் தொடங்கவுள்ள நிலையில், முழங்கால் காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர் நிதீஷ் குமார் ரெட்டி விலகியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெற்று விளையாடிய நிதீஷ் குமார் ரெட்டி, உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சி மேற்கொண்டபோது காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் மீதமுள்ள போட்டிகளிலிருந்து விலகுகிறார்.

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங், நான்காவது டெஸ்ட் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவதற்கு தயாராக இருக்கமாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பந்துவீச்சு பயிற்சியின்போது, அவரது இடது கை கட்டைவிரலில் காயம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முழங்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் நிதீஷ் குமார் ரெட்டி விலகுகிறார். தாயகம் திரும்பவுள்ள அவர் விரைவில் குணமடைய வேண்டும் என விரும்புகிறோம்.

பந்துவீச்சு பயிற்சியின்போது, வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்குக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பிசிசிஐ மருத்துவக் குழு அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளிலிருந்து நிதீஷ் குமார் ரெட்டி விலகியுள்ளார். 

நான்காவது டெஸ்ட்டில் அர்ஷ்தீப் சிங் விளையாட முடியாத சூழல் உள்ளது. இதன் காரணமாக, இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் இளம் வேகப் பந்துவீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் சேர்க்கப்பட்டுள்ளார். 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory