» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

லாஸ் வேகாஸ் செஸ் கிராண்ட்ஸ்லாம்: கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

வெள்ளி 18, ஜூலை 2025 4:32:37 PM (IST)



லாஸ் வேகாஸ் செஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சனை இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா வீழ்த்தினார்.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் லாஸ் வேகாஸ் செஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 4-வது சுற்றில் பிரக்ஞானந்தாவுடன், உலக சாம்பியன் பட்டத்தை 5 முறை வென்றவரான மேக்னஸ் கார்ல்சன் மோதினார். இந்த சுற்றில் 39-வது நகர்த்தலின் போது கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா.

இதன் மூலம் ரேபிட் செஸ் போட்டியின் புள்ளிப் பட்டியலில் பிரக்ஞானந்தா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இந்தச் சுற்றின் முடிவில் பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்டுசட்டோரோவ், ஜவோகிர் சிந்தரோவ் ஆகியோர் தலா 4.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory