» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவைப் பேச அனுமதிக்கக் கூடாது: பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 5:53:04 PM (IST)

சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசத் தொடங்கிய பிறகே வாக்குவாதமும் சலசலப்பும் ஏற்படுவதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று பேசிய அவர், "மக்களின் பிரச்சினைகளை விவாதிப்பதற்காகத்தான் சட்டப்பேரவை நடைபெறுகிறது. ஆனால் கடந்த 3, 4 நாட்களாகப் பேரவையில் தொடர்ந்து வாக்குவாதம் நடைபெற்று வருகிறது. ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதால் பேரவை நிகழ்வுகள் நீண்ட நேரம் நடைபெறுகின்றன. இதனால் தமிழக மக்களுக்கு என்ன பயன்?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், "உறுப்பினர்கள் தேர்வுக்குத் தயாராவதைப் போல் பேரவையில் பேசுவதற்குத் தயாராகி வருகின்றனர். ஆனால் மக்களின் பிரச்சினைகள் குறித்துச் சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே பேசப்படுகிறது. மீதமுள்ள நேரம் முழுவதும் வாக்குவாதமாகவே செல்கிறது. எனவே, அனைவருக்கும் பேரவையில் பேசுவதற்கு உரிய வாய்ப்பு வழங்க வேண்டும்" என்றார்.
தொடர்ந்து பேசிய பிரேமலதா, "அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசாத வரை சட்டப்பேரவை அமைதியாகச் செல்கிறது. அவர் பேசத் தொடங்கியவுடன் பிரச்சினை ஏற்படுகிறது. இது சட்டமன்றம்; சண்டை மன்றம் அல்ல. எனவே அவரைப் பேச அனுமதிக்கக் கூடாது" என்று தெரிவித்தார்.
மேலும், தற்போதைய அரசுக்கு மக்கள் நலனுக்காகச் செயல்பட வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், மக்களுக்காகத் தங்களால் முடிந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நேபாள பேரிடரில் சிக்கிய தமிழர்கள் மீட்புப் பணிகள்: தமிழக அமைச்சர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை!
வெள்ளி 28, ஆகஸ்ட் 2026 12:04:38 PM (IST)

தமிழகத்தில் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும்: உணவு வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன்
வெள்ளி 28, ஆகஸ்ட் 2026 11:10:55 AM (IST)

கனிம வள கடத்தல், போதைப்பொருள் தடுப்பு: ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 5:32:50 PM (IST)

தூத்துக்குடி வி.இ.ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் : மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 4:54:07 PM (IST)

சிறுவன் ஓட்டிய பைக் மோதி மூதாட்டி பலி: தந்தை கைது!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 4:16:28 PM (IST)

லெவிஞ்சிபுரம் டாஸ்மாக் கடையை அகற்றாத மர்மம் என்ன?மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 3:38:42 PM (IST)



இதுAug 27, 2026 - 07:22:07 PM | Posted IP 162.1*****