» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திமுக எம்எல்ஏக்களுக்கு அரசு வழங்கும் கார் வேண்டாம் - சட்டப்பேரவையில் உதயநிதி அறிவிப்பு
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 12:23:23 PM (IST)

திமுகவை சேர்ந்த 59 எம்எல்ஏக்களும் அரசு வழங்கும் கார்களை பெற மாட்டோம் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று பேசிய உதயநிதி ஸ்டாலின், "ஒரு முக்கியமான விஷயத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். அனைத்து எம்எல்ஏக்களுக்கு புதிய வாகனம் வழங்குவதாக இந்த அரசு முடிவு எடுத்து அறிவித்துள்ளது. ஏற்கெனவே தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக முதல்வர் விஜயே கூறி வருவதால், திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் திமுகவைச் சேர்ந்த 59 எம்எல்ஏக்களும் அரசு வழங்கும் காரை பெற மாட்டோம்.
அரசுக்கு ஏற்படும் தேவையற்ற செலவுகளை குறைக்கும் நோக்கில் எம்எல்ஏக்கள் தங்களது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள பொருளாதார சூழலை கவனத்தில் கொண்டு, பொருளாதாரத்தில் நலிவடைந்த உறுப்பினர்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பின் கீழ் வாகனங்கள் வழங்க வேண்டும் என்பதை இந்த அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன்.” என்று கூறினார்.
அதற்கு பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "கார் வைத்திருக்கும் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் கார் கேட்டு விண்ணப்பிக்கப் போவதில்லை. எங்களின் நிலைப்பாடும் அது தான். அனைவரும் சமம் என்ற முறையில் தான் அனைவருக்கும் கார் அறிவிக்கப்பட்டுள்ளது. கார் என்பது ஆடம்பரம் இல்லை. மக்களை சந்திப்பதற்கான தேவை” என்று பதிலளித்தார்.
மேலும் அவர், "உதயநிதிக்கு இரண்டு, மூன்று வீடுகள் இருக்கும் போது ஏன் அரசு பங்களா கேட்கிறார்” என்றும் வினவினார். அரசு வாகனம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் காரசார விவாதம் நிகழ்ந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் கடைகளுக்கு சீல்: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 5:39:23 PM (IST)

தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம் விவகாரம்: அமைச்சரிடம் உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 3:36:28 PM (IST)

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா சந்திப்பு
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 11:12:07 AM (IST)

சட்டசபையா? சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியா? என்று சந்தேகம் வருகிறது - உதயநிதி குற்றச்சாட்டு!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 11:02:20 AM (IST)

மேடையில் நாஞ்சில் சம்பத் மீது நாற்காலி வீச்சு: இடும்பாவனம் கார்த்திக் பரபரப்பு விளக்கம்!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 10:57:20 AM (IST)

நெல்லையில் குரூப் 2 தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 24ஆம் தேதி தொடங்குகிறது!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 10:44:13 AM (IST)


