» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு தொடங்கியது: முதல்வர் விஜய் பங்கேற்பு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 11:20:23 AM (IST)

சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்களின் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகின்றது.
சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்று வரும் தென்மண்டலக் குழுவின் 31-ஆவது கூட்டத்தில், தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய், கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், கேரள முதல்வர் வி.டி. சதீஷன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி வெளிநாடு சுற்றுப்பயணம் செல்லவுள்ளதால், அம்மாநிலம் சார்பில் துணை முதல்வர் பங்கேற்றுள்ளார். இந்த மாநாட்டை புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி புறக்கணித்திருக்கும் நிலையில், துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்துகொண்டுள்ளார்.
மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம், 1956-இன் சட்டப் பிரிவுகள் 15 முதல் 22-இன் கீழ், தென்மண்டலக் குழு உள்பட ஐந்து மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இதில், தென்மண்டலக் குழுவின் தலைவராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செயல்படுகிறார். சுழற்சி அடிப்படையில், இந்த முறை தமிழ்நாடு முதல்வர் ச. ஜோசப் விஜய் இக்குழுவின் துணைத் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார்.
மாநாட்டில், மாநிலங்களுக்கு இடையிலான எல்லைப் பிரச்னைகள், ஆந்திர பிரதேச மறுசீரமைப்புச் சட்டம் தொடர்புடைய விவகாரங்கள், நதிநீர்ப் பங்கீட்டுத் திட்டங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விரைந்து விசாரிக்க அமைக்கப்பட்ட விரைவு நீதிமன்றங்கள், பெண்கள் பாதுகாப்பு, பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைவாக புலனாய்வு செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவது, பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டம், விமானப் போக்குவரத்து மற்றும் கல்வி தொடர்பான பொதுவான மாநில விவகாரங்கள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளன.
முன்னதாக, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், மத்திய அமைச்சர் அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பேசினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காட்டுப் பன்றிகளைப் பிடிக்கக் கூண்டுகள் தயார் செய்ய ஆட்சியர் விஷு மகாஜன் உத்தரவு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 4:21:52 PM (IST)

சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!: போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 12:53:39 PM (IST)

நெல்லை அருகே காகித ஆலையில் பயங்கர தீ விபத்து: 25,000 டன் காகிதங்கள் எரிந்து நாசம்!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 12:17:22 PM (IST)

கோவில்பட்டி வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 12:02:34 PM (IST)

திருச்செந்தூரில் ஒருங்கிணைந்த காவல் கட்டுப்பாட்டு மையம் : எஸ்பி சிவபிரசாத் திறந்து வைத்தார்
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 8:54:12 AM (IST)

அடுத்த பிரதமர் விஜய்: தவெகவினருக்குக் காங்கிரஸ் தான் பதிலளிக்க வேண்டும் — கனிமொழி எம்.பி. பேட்டி
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 8:29:32 AM (IST)


