» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
உலக புகைப்பட தினம்: நெல்லை புகைப்படக் கலை சங்கத்தினர் ரத்ததானம்!
புதன் 19, ஆகஸ்ட் 2026 5:41:48 PM (IST)

திருநெல்வேலியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு, புகைப்படக் கலை தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் பல்வேறு நலதிட்ட பணிகள் நடைபெற்றன.
உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்ட புகைப்படக் கலை தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் முதியோருக்கு உணவு வழங்குதல், ரத்ததான முகாம் மற்றும் சிறப்புப் பயிற்சி வகுப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
உலக புகைப்பட தினமான இன்று காலை, நெல்லை மாவட்ட புகைப்படக் கலை தொழிலாளர்கள் நலச் சங்க உறுப்பினர்கள் ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு நேரில் சென்று அங்கிருந்த முதியோர்களுக்குக் காலை உணவு வழங்கிச் சிறப்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற ரத்ததான முகாமில் சங்கத்தின் உறுப்பினர்கள் பலர் தானாக முன்வந்து ரத்ததானம் வழங்கினர். தொடர்ந்து புகைப்படக் கலைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்தும் வகையில் சிறப்புப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாலை விபத்தில் பலியான ஆசிரியை குடும்பத்திற்கு ரூ. 27 லட்சம் இழப்பீடு: தீர்ப்பாயம் உத்தரவு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 5:11:16 PM (IST)

எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கும் திட்டம் தேவை தானா?” - தவெக அரசுக்கு சீமான் கடும் கண்டனம்!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 4:58:37 PM (IST)

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்க வேண்டும்: முதல்வர் விஜய் வலியுறுத்தல்!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 4:49:37 PM (IST)

காட்டுப் பன்றிகளைப் பிடிக்கக் கூண்டுகள் தயார் செய்ய ஆட்சியர் விஷு மகாஜன் உத்தரவு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 4:21:52 PM (IST)

சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!: போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 12:53:39 PM (IST)

நெல்லை அருகே காகித ஆலையில் பயங்கர தீ விபத்து: 25,000 டன் காகிதங்கள் எரிந்து நாசம்!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 12:17:22 PM (IST)


