» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கூடங்குளம் அணு உலையில் வடிகால் அமைப்பிற்குள் நுழைந்த ஜெல்லி மீன்கள்: மின் உற்பத்தி நிறுத்தம்!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 8:33:58 AM (IST)

நெல்லை மாவட்டம் கூடங்குளம் 2-வது அணு உலையின் வடிகால் அமைப்பிற்குள் ஜெல்லி மீன்கள் புகுந்ததால் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின் உற்பத்தி திடீரென நிறுத்தப்பட்டது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரஷிய நாட்டுத் தொழில்நுட்ப உதவியுடன் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் மூலம் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. மேலும், 4 புதிய அணு உலைகள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இங்குள்ள அணு உலைகளைக் குளிர்விப்பதற்காக 'ஈரப்பத பிரிப்பான் வடிகால் அமைப்பு' (Moisture Separator Drainage System) செயல்பட்டு வருகிறது. இதில் சக்திவாய்ந்த மோட்டார்கள் மூலம் கடல்நீர் உறிஞ்சப்பட்டு அணு உலைகள் குளிர்விக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் காலையில், 2-வது அணு உலையின் ஈரப்பத பிரிப்பான் வடிகால் அமைப்பிற்குள் ஏராளமான ஜெல்லி மீன்கள் திடீரெனப் புகுந்தன.
ஜெல்லி மீன்கள் வடிகால் அமைப்பை அடைத்துக் கொண்டதால், உடனடியாகத் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2-வது அணு உலையில் மின் உற்பத்தி உடனடியாக நிறுத்தப்பட்டது.
தகவலறிந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, வடிகால் அமைப்பில் சிக்கியிருந்த ஜெல்லி மீன்களை அகற்றி அக்கோளாறைச் சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தொழில்நுட்பக் கோளாறு முழுமையாகச் சரிசெய்யப்பட்டு, 2-வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கேஸ் சிலிண்டர் முன்பதிவு: இ-கே.ஒய்.சி. ஆவணங்கள் சமர்ப்பிக்க ஆகஸ்ட் 31 வரை அவகாசம் நீடிப்பு!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 7:55:24 PM (IST)

காதல் விவகாரத்தில் சட்டக்கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை; பெண்ணின் தந்தை, தம்பி கைது!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 7:53:09 PM (IST)

நாட்டு வெடிகுண்டு தயாரித்து ரீல்ஸ் வெளியிட்ட 3பேர் கைது : தூத்துக்குடியில் பரபரப்பு!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 7:33:13 PM (IST)

கம்யூனிஸ்ட் கட்சிகளை ஆராய்வதா? தலைமைச் செயலாளரை பதவி நீக்க மார்க்சிஸ்ட் கோரிக்கை!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 11:36:01 AM (IST)

ரயில் சூட்கேஸில் எலும்புக்கூடு வழக்கு: ஒடிசா பெண் படுகொலை? - வடமாநில தம்பதிக்கு வலை!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 10:52:27 AM (IST)

விக்சித் பாரத் 2047: கோவையைச் சேர்ந்த பெண் மருத்துவர் உருவாக்கிய கல்விக்கொடி & லோகோ!
சனி 22, ஆகஸ்ட் 2026 5:03:37 PM (IST)


