» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாநில உரிமைகளை விட்டுத்தராத போக்கு தொடர வேண்டும் : முதல்வர் விஜய்க்கு கமல்ஹாசன் பாராட்டு!

செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 10:44:57 AM (IST)

CMVijayKamal.jpg

பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிக்கும் வகையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காத போக்கு தொடர வேண்டும் என முதல்வர் விஜயைப் பாராட்டியுள்ளார்.

தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளத்தை நிலைநிறுத்தும் வகையில், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பாகத் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் கட்டாயம் பாடப்பட வேண்டும் என்ற தனித் தீர்மானத்தைச் சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் முன்மொழிந்தார்.இதனைத் தொடர்ந்து, முதல்வர் கொண்டு வந்த இந்தத் தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

இத்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது 'எக்ஸ்' (ட்விட்டர்) தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: "அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாகப் பாடப்பட வேண்டும் எனச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது பெரும் மகிழ்ச்சிக்குரியது; மனதார வரவேற்கத்தக்கது. மாநில உரிமைகளை எக்காரணம் கொண்டும் விட்டுத்தராத இந்த ஆரோக்கியமான போக்கு தொடர்ந்து நீடிக்க வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory