» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மதுரை - தூத்துக்குடி புதிய அகல ரயில் பாதை திட்டம் : ரூ.2.51 கோடி ஆலோசனைக் குழு டெண்டர் வெளியீடு!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 9:23:56 PM (IST)
தென் தமிழகத்தின் மிக முக்கிய ரயில்வே திட்டங்களில் ஒன்றான மதுரை - தூத்துக்குடி இடையேயான புதிய அகல ரயில் பாதை திட்டப் பணிகளை விரைவுபடுத்தும் வகையில், ரூ.2.51 கோடி மதிப்பில் ஆலோசனை டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 143.5 கிலோமீட்டர் நீளம் கொண்ட இப்புதிய அகல ரயில் பாதையில், மீளவிட்டான் முதல் மேல்மருதூர் வரையிலான 18 கிலோமீட்டர் தூரத்திற்கான பணிகள் கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதமே நிறைவடைந்தன. இந்த புதிய ரயில் பாதை மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கல்லுப்பட்டி, அருப்புக்கோட்டை, மேல்மருதூர் மற்றும் மீளவிட்டான் வழியாகத் தூத்துக்குடியைச் சென்றடையும் வகையில் வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த ஆலோசனைக் குழு டெண்டரின் கீழ், சுமார் 120 கிலோமீட்டர் தூரத்திற்கான இறுதி இருப்பிடம் ஆய்வு, DGPS தொழில்நுட்பம் மூலமாக நிலங்களை அளவீடு செய்தல், பாலங்கள், மேம்பாலங்கள் மற்றும் கீழ்பாலங்கள் (ROB / RUB) வடிவமைப்பு, புதிய ரயில் நிலையங்களுக்கான வரைபட வடிவமைப்பு, நீர்வழி மற்றும் வடிகால் ஆய்வுகள் மேற்கொள்ளுதல் மற்றும் முழுமையான பொறியியல் ஆவணங்களைத் தயாரித்தல் ஆகிய முக்கியப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இவற்றுக்கான அறிக்கையைத் தொடர்புடைய ஆலோசனைக் குழுவினர் நான்கு மாதங்களுக்குள் முடித்துச் சமர்ப்பிக்க வேண்டும் எனக் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் முழுமையாக நிறைவடையும் பட்சத்தில் மதுரைக்கும் தூத்துக்குடிக்கும் இடையே மிக வேகமான நேரடி ரயில் இணைப்பு வசதி சாத்தியமாகும். இது பயணிகளுக்கு மட்டுமன்றிச் சரக்குப் போக்குவரத்து சேவைக்கும் பெரும் உதவியாக இருக்கும்.
மேலும், தூத்துக்குடி துறைமுகத்தின் வணிக வளர்ச்சிக்குப் பெரும் ஊக்கம் அளிப்பதுடன், தென் தமிழகத்தின் தொழில் துறை, வணிகம் மற்றும் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.
அதேவேளையில், இத்திட்டம் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள ரயில்வே ஆர்வலர்கள், "டெண்டர் வெளியீடு என்பது முதற்கட்ட நடவடிக்கை மட்டுமே; இத்திட்டம் விரைவாக நனவாக வேண்டுமானால் மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்து, காலதாமதமின்றி பணிகளைச் செயல்படுத்த வேண்டும்" என வலியுறுத்தியுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆடி கிருத்திகை விழா: தூத்துக்குடி சிவன் கோவிலில் அம்மனுக்கு ஊஞ்சல் சேவை - திரளான பெண்கள் வழிபாடு!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 8:11:56 PM (IST)

உதயநிதி ஸ்டாலின் காரில் ஏற முயன்ற எடப்பாடி பழனிசாமி: சட்டசபை வளாகத்தில் பரபரப்பு!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 4:58:38 PM (IST)

அரசுப் பள்ளி சாதனை: நீட் தேர்வில் வென்று 10 மாணவர்கள் மருத்துவப் படிப்பிற்குத் தேர்வு!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 3:24:24 PM (IST)

முந்தைய திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி வேளாண் பட்ஜெட் தாக்கல்! - எடப்பாடி பழனிசாமி சாடல்!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 12:48:02 PM (IST)

தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலய 141-வது ஆண்டு திருவிழா: திருத்தேர் பவனி கோலாகலம்!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 12:18:30 PM (IST)

உழவர் சந்தைகளைப் புனரமைக்க ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு: வேளாண் பட்ஜெட் முக்கிய அம்சங்கள்!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 12:04:54 PM (IST)


