» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நாங்குநேரி வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆய்வு!
வெள்ளி 24, ஜூலை 2026 5:17:33 PM (IST)

வளமிகு வட்டாரங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நாங்குநேரி வட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு மாநில திட்டக் குழுவால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியத் திட்டமான வளமிகு வட்டாரங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் (Focus Blocks Development Programme - FBDP) கீழ், பின்தங்கிய வட்டாரங்களைத் தேர்வு செய்து அவற்றின் வளர்ச்சியை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரி வட்டம் தேர்வு செய்யப்பட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பொதுமக்களுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகள், சேவைகள் மற்றும் மருத்துவ வசதிகள் போன்ற வளர்ச்சித் திட்டப் பணிகளை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் நோக்கில் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.ஆய்வின் ஒரு பகுதியாக, நாங்குநேரி வட்டம், பருத்திப்பாடு பகுதியில் அமைந்துள்ள நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் இருப்பு, தரம், அளவு மற்றும் குடிமைப் பொருட்களின் பதிவேற்றம் ஆகியவை குறித்து ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, பருத்திப்பாடு அரசு துணை சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள், கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சிகிச்சைகள் மற்றும் மருந்துப் பொருட்களின் இருப்பு குறித்துப் பரிசீலித்தார். ஆய்வின் போது, 5 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும் ஆட்சியர் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, சின்னமூலைக்கரைப்பட்டி அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் வருகை, உணவின் தரம், கற்பிக்கும் முறை மற்றும் குழந்தைகளின் வயதிற்கேற்ற உயரம், எடை வளர்ச்சி ஆகியவை குறித்தும், பருத்திப்பாடு ஊராட்சி அலுவலகத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வின் போது, மாவட்ட ஊராட்சி செயலாளர் இசக்கியப்பன், மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் முரளி சங்கர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவக்குமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பரந்தூர் விமான நிலையம் அமைப்பது குறித்த தவெக அரசின் நிலைப்பாடு என்ன? – சீமான் கேள்வி!
வெள்ளி 24, ஜூலை 2026 5:47:01 PM (IST)

நெல்லை கேன்சர் மருத்துவமனை கட்டிடப் பணிக்கு டிஎம்பி அறக்கட்டளை ரூ.1 கோடி நிதி உதவி!
வெள்ளி 24, ஜூலை 2026 3:42:10 PM (IST)

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடகா செல்கிறார் தமிழக முதல்வர் விஜய்!
வெள்ளி 24, ஜூலை 2026 12:31:08 PM (IST)

தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
வெள்ளி 24, ஜூலை 2026 10:25:18 AM (IST)

பழைய குற்றாலத்தில் சட்டவிரோத வாகனக் கட்டண வசூல் : ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 24, ஜூலை 2026 8:44:06 AM (IST)

வரதட்சணை கொடுமையால் இளம் பெண் தற்கொலை: கல்லூரிப் பேராசிரியர் மற்றும் அவரது தாய் கைது!
வெள்ளி 24, ஜூலை 2026 7:50:01 AM (IST)


