» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நீரோவின் ஆட்சி போல் தவெக அரசு செயல்படுகிறது : எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
வியாழன் 23, ஜூலை 2026 4:39:43 PM (IST)

நாடும் நாட்டு மக்களும் எக்கேடாய்ப் போனால் என்ன என்று தமிழக ஆட்சியாளர்கள் கொண்டாட்டத்தில் திளைப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது மூதாட்டியின் கால் விரலை எலிகள் கடித்துக் குதறியதாக வெளியான செய்தி தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது 'எக்ஸ்' சமூக வலைதளப் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயதுப் பெண்ணின் கால் விரலை எலிகள் கடித்துக் குதறியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளை இன்றைய அரசு எப்படி வைத்திருக்கிறது என்பதற்கு இந்தச் செய்தியே சாட்சி. அரசை நம்பி சிகிச்சை பெற வந்து, எலி கடித்துக் கால் விரலை இழந்துள்ள அந்தப் பெண்ணிற்கு இந்த அரசு என்ன பதில் வைத்திருக்கிறது?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், "மக்கள் இப்படித் திண்டாடிக் கொண்டிருக்க, இத்துறையின் அமைச்சரோ திரைப்படம் பார்த்துக் கொண்டாடிச் சுயபடம் பதிவிட்டுக் கொண்டிருக்கிறார். அவர் மட்டுமல்லாமல், இன்று முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் படம் பார்க்க விடுமுறை எடுத்துள்ளதாகச் செய்திகள் வருகின்றன.
நாடும் நாட்டு மக்களும் எக்கேடாய்ப் போனால் என்ன என்று கொண்டாட்டத்தில் திளைக்கும் புதிய நீரோ அரசிற்கு எனது கடும் கண்டனம். உடனடியாகப் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய மருத்துவச் சிகிச்சை அளிப்பதுடன், அவருக்கான இழப்பீடும் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை கேன்சர் மருத்துவமனை கட்டிடப் பணிக்கு டிஎம்பி அறக்கட்டளை ரூ.1 கோடி நிதி உதவி!
வெள்ளி 24, ஜூலை 2026 3:42:10 PM (IST)

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடகா செல்கிறார் தமிழக முதல்வர் விஜய்!
வெள்ளி 24, ஜூலை 2026 12:31:08 PM (IST)

தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
வெள்ளி 24, ஜூலை 2026 10:25:18 AM (IST)

பழைய குற்றாலத்தில் சட்டவிரோத வாகனக் கட்டண வசூல் : ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 24, ஜூலை 2026 8:44:06 AM (IST)

வரதட்சணை கொடுமையால் இளம் பெண் தற்கொலை: கல்லூரிப் பேராசிரியர் மற்றும் அவரது தாய் கைது!
வெள்ளி 24, ஜூலை 2026 7:50:01 AM (IST)

தூத்துக்குடி வாலிபர் அருணாச்சலம் மரணம்: நீதிபதி முன்னிலையில் பிரேத பரிசோதனை வீடியோ பதிவு!
வியாழன் 23, ஜூலை 2026 5:49:41 PM (IST)


