» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முதல்வர் விஜய் குறித்து பேச்சு: மார்க்கண்டேயன் எம்எல்ஏ அதிரடி கைது!

திங்கள் 20, ஜூலை 2026 7:35:01 AM (IST)

MarkendayanArrest.jpg

தமிழக முதல்வர் விஜய் குறித்துப் பொதுக்கூட்டத்தில் விமர்சித்துப் பேசிய விவகாரத்தில், திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் சனிக்கிழமை அன்று திமுக சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன், தற்போதைய தமிழக முதல்வர் விஜய் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து உரை நிகழ்த்தியதாகக் கூறப்படுகிறது.

முதல்வர் குறித்து அவதூறாகவும் விமரிசித்தும் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், தாலுகா காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து, மார்க்கண்டேயன் வசிக்கும் வீட்டிற்கு நேரடியாகச் சென்ற காவல் துறையினர், அவரைக் கைது செய்து சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

gvmArrest.jpg

எம்எல்ஏ கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து விளாத்திகுளம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory