» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் 26-வது முறையாக ஓட்டை : புதிய பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

திங்கள் 20, ஜூலை 2026 8:50:43 AM (IST)

vallanaduBridge26Hole.jpg

நெல்லை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வல்லநாடு அருகே தாமிரபரணி ஆற்றுப்பாலம் கட்டப்பட்டு, 2012-ஆம் ஆண்டு முதல் வாகனப் போக்குவரத்து நடந்து வருகிறது. இப்பாலம் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாக அனைத்துத் தரப்பினரும் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்தப் பாலத்தில் அடிக்கடி ஓட்டை விழுவதும், போக்குவரத்தைத் தடை செய்து சில நாட்கள் பெயரளவிலான மராமத்துப் பணிகள் மேற்கொள்வதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலத்தின் மையப்பகுதி பழுது பார்க்கப்பட்டுப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட நிலையில், தூத்துக்குடி - நெல்லை மார்க்கச் சாலையில் மீண்டும் 26-வது முறையாகப் பெரிய ஓட்டை விழுந்துள்ளது. இதைக் கண்ட வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

தகவலறிந்த அதிகாரிகள் உடனடியாகப் பாலத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். பாலத்தில் இரும்புத் தடுப்புகளை வைத்துத் தூத்துக்குடி - நெல்லை மார்க்கப் போக்குவரத்துத் தடை செய்யப்பட்டது. தற்போது வாகனங்கள் நெல்லை - தூத்துக்குடி மார்க்கச் சாலையில் ஒருவழிப்பாதையாக மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

தூத்துக்குடி துறைமுகம், விமான நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான கார்கள், பேருந்துகள், கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் சென்று வருவதால் இப்போக்குவரத்து மாற்றம் பொதுமக்களிடையே பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிரந்தரத் தீர்வுக்குக் கோரிக்கை:

முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பாலத்தில் அடிக்கடி ஓட்டை விழுவதும், தற்காலிகமாகக் சிமெண்ட் பூச்சு மூலம் மராமத்துச் செய்வதும் தொடர்கிறது. இரவு, பகல் எநேரமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் இத்தபாலில் பெரும் விபத்து நிகழ்வதற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிரந்தரத் தீர்வு காண வேண்டும். பாலம் முற்றிலும் தரமற்ற நிலையில் உள்ளதால், அதனை முழுமையாக அகற்றிவிட்டுப் புதிய பாலம் கட்ட வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.


மக்கள் கருத்து

தமிழ்ச்செல்வன்Jul 20, 2026 - 01:25:22 PM | Posted IP 172.7*****

தூத்துக்குடி துறைமுகத்திற்கு கன்டெய்னர்களை ஏற்றிச்செல்லும் லாரிகள் அனைத்தும் இந்தப் பாலத்தின் வழியாகச் சென்று வருகிறது... என்றாவது ஒருநாள் பேருந்து பயணிகளுடன் ஆற்றில் விழுந்தது... லாரி கன்டெய்னருடன் பாலம் உடைந்து ஆற்றில் விழுந்தது என செய்தி கண்டிப்பாக வரும்.... எத்தனை பேர் அதில் பலியாகப் போகிறார்களோ தெரியவில்லை.... அந்த லட்சணத்தில் இருக்கிறது புதிய பாலம்.... விரைவில் 100வது ஓட்டை விழ வாழ்த்துக்கள்..... அதுவரையிலும் வேடிக்கை மட்டுமே பார்ப்போம்... இதுக்கு பேரு தங்க நாற்கர சாலை..... இதுக்கு டோல்கேட் வேற... வௌங்கிரும்டா..... See less

உண்மJul 20, 2026 - 10:06:05 AM | Posted IP 172.7*****

இது தான் திராவிட ஆட்சியில் கட்டியது ஓட்டை பாலம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory