» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை!
சனி 18, ஜூலை 2026 11:39:35 AM (IST)
தட்டாரமடம் அருகே மிட்டாய் வியாபாரி வீட்டின் கதவை உடைத்து, 13 பவுன் தங்க நகைகள் மற்றும் 2 லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் தட்டாரமடம் சுப்பிரமணியபுரம், ராஜீவ் காந்தி நடுத்தெருவைச் சேர்ந்தவர் சௌந்தர்ராஜ் மகன் லிங்ககுமார் (27). இவர் அப்பகுதியில் மிட்டாய் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று இரவு 7:30 மணியளவில், லிங்ககுமார் தனது குடும்பத்தினருடன் வீட்டைப் பூட்டிவிட்டு, அருகில் உள்ள இசக்கி அம்மன் கோவில் திருவிழா வழிபாட்டிற்காகச் சென்றுள்ளார்.
பின்னர் அவர்கள் வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, அறையிலிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன.
பீரோவின் உள்அறையில் வைக்கப்பட்டிருந்த 9 பவுன் தங்கச் சங்கிலி, 4 பவுன் தங்கச் சங்கிலி என மொத்தம் 13 பவுன் தங்க நகைகள் மற்றும் வியாபாரத்திற்காக வைத்திருந்த 2 லட்ச ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து லிங்ககுமார் அளித்த புகாரின் பேரில், தட்டாரமடம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், விரல் ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பணத்தை வாரி இறைத்து அப்பாவிகளின் வாயை அடைக்க முயற்சி: தவெக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!
சனி 18, ஜூலை 2026 5:46:54 PM (IST)

தமிழகத்தில் ஜூலை 22 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!
சனி 18, ஜூலை 2026 5:39:54 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : அமைச்சர் மரிய வில்சன் ஆய்வு!
சனி 18, ஜூலை 2026 5:27:03 PM (IST)

காளியம்மன் கோயில் கொடை விழா மாட்டு வண்டி பந்தயம் : 52 ஜோடி மாடுகள் பங்கேற்பு!
சனி 18, ஜூலை 2026 12:11:57 PM (IST)

அமைச்சர் ஆனந்த் மீது வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் ஞானசவுந்தரி த.வெ.க-விலிருந்து நீக்கம்!
சனி 18, ஜூலை 2026 11:29:22 AM (IST)

தமிழக வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.82 லட்சம் பறிமுதல்
சனி 18, ஜூலை 2026 10:42:22 AM (IST)


