» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இ.பி.எஸ்., தலைமையிலான அதிமுகவை எவராலும் அழிக்க முடியாது: எஸ்.பி. சண்முகநாதன் பேச்சு!
சனி 18, ஜூலை 2026 10:20:15 AM (IST)

எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கும் அதிமுகவை எவராலும் அழிக்க முடியாது என்று முன்னாள் அமைச்சா் எஸ்.பி. சண்முகநாதன் பேசினார்.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மஹாலில், தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் மற்றும் அதன் இணைப்புத் தொழிற்சங்கங்களின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்கள் ராஜா, ராஜேந்திரன், அண்ணா ஆட்டோ தொழிற்சங்கச் செயலாளர் நிலாசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அண்ணா தொழிற்சங்கப் போக்குவரத்துப் பிரிவு மண்டலச் செயலாளர் கல்விக்குமார் வரவேற்புரை ஆற்றினார். இதில் அதிமுக அமைப்புச் செயலாளரும் தெற்கு மாவட்டச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன், அண்ணா தொழிற்சங்கப் பேரவை மாநிலச் செயலாளர் தமிழரசன், மாநிலத் தலைவர் பொன் தனபாலன், மாநிலப் பொருளாளர் அப்துல் அமீது ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
கூட்டத்தில் எஸ்.பி. சண்முகநாதன் பேசுகையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் உத்தரவின்படி இந்த ஆலோசனைக் கூட்டங்கள் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக நடத்தப்பட்டு வருகிறது. அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் முன்னாள் செயலாளர் கமலக்கண்ணன் மற்றும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள நிலையிலும், தூத்துக்குடி மாவட்டங்களில் 95 சதவீதத் தொண்டர்களும் தொழிற்சங்க அமைப்புகளும் தொடர்ந்து அதிமுகவிலேயே நீடித்து வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கும் அதிமுகவை எவராலும் அழிக்க முடியாது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மற்றும் தவெகவின் அரசியல் நகர்வுகள் குறித்துப் பேசிய அவர், மாற்று முகாம்களுக்குச் சென்றவர்கள் மீண்டும் கட்சிக்கு வர விரும்பினாலும் அவர்கள் தொடக்க நிலையிலிருந்தே பணியாற்ற வேண்டும் எனப் பொதுச் செயலாளர் முடிவு செய்துவிட்டார். எத்தகைய தேர்தல் வந்தாலும் அதனை எதிர்கொள்ளும் வகையில் கட்சிப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், வரும் காலத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க அனைவரும் முழுமையாக உழைக்க வேண்டும் என்றும் அவர் தொண்டர்களைக் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் அமைப்புச் செயலாளர் சின்னதுரை, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத் துணைச் செயலாளர் ஹென்றி, தெற்கு மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் மோகன், தெற்கு மாவட்ட பொருளாளர் சேவியர் உள்ளிட்ட சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் துணைச் செயலாளர் ஆனந்தராஜ் நன்றியுரையாற்றினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடகா செல்கிறார் தமிழக முதல்வர் விஜய்!
வெள்ளி 24, ஜூலை 2026 12:31:08 PM (IST)

தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
வெள்ளி 24, ஜூலை 2026 10:25:18 AM (IST)

பழைய குற்றாலத்தில் சட்டவிரோத வாகனக் கட்டண வசூல் : ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 24, ஜூலை 2026 8:44:06 AM (IST)

வரதட்சணை கொடுமையால் இளம் பெண் தற்கொலை: கல்லூரிப் பேராசிரியர் மற்றும் அவரது தாய் கைது!
வெள்ளி 24, ஜூலை 2026 7:50:01 AM (IST)

தூத்துக்குடி வாலிபர் அருணாச்சலம் மரணம்: நீதிபதி முன்னிலையில் பிரேத பரிசோதனை வீடியோ பதிவு!
வியாழன் 23, ஜூலை 2026 5:49:41 PM (IST)

நலவாழ்வுச் சங்கத்தில் பல்வேறு பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஆட்சியர் ஆனந்த் மோகன் அழைப்பு!
வியாழன் 23, ஜூலை 2026 5:43:08 PM (IST)


