» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி மாதப் பிறப்பு தீர்த்தவாரி: சிறப்பு அபிஷேகங்கள்!
சனி 18, ஜூலை 2026 8:52:19 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழ் ஆடி மாதப் பிறப்பை முன்னிட்டுச் சிறப்பு வழிபாடுகள் மற்றும் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்றன.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி மாதத் தொடக்கத்தையொட்டி கோயிலின் நடை அதிகாலை 5:00 மணிக்குத் திறக்கப்பட்டது. தொடர்ந்து காலை 5:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், காலை 6:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றன. காலை 10:00 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனையுடன் இதர காலப் பூஜைகளும் வழக்கம்போல் நடத்தப்பட்டன.
பூஜைகளின் தொடர்ச்சியாகச் சுவாமி அஸ்திரதேவர் சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அவருக்குப் பல்வேறு வாசனைத் திரவியப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் பாரம்பரியத் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்றது. மாதப் பிறப்பையொட்டி அதிகாலை முதலே பொதுமக்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் நீராடி, வரிசையில் காத்திருந்து வழிபாடு மேற்கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடகா செல்கிறார் தமிழக முதல்வர் விஜய்!
வெள்ளி 24, ஜூலை 2026 12:31:08 PM (IST)

தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
வெள்ளி 24, ஜூலை 2026 10:25:18 AM (IST)

பழைய குற்றாலத்தில் சட்டவிரோத வாகனக் கட்டண வசூல் : ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 24, ஜூலை 2026 8:44:06 AM (IST)

வரதட்சணை கொடுமையால் இளம் பெண் தற்கொலை: கல்லூரிப் பேராசிரியர் மற்றும் அவரது தாய் கைது!
வெள்ளி 24, ஜூலை 2026 7:50:01 AM (IST)

தூத்துக்குடி வாலிபர் அருணாச்சலம் மரணம்: நீதிபதி முன்னிலையில் பிரேத பரிசோதனை வீடியோ பதிவு!
வியாழன் 23, ஜூலை 2026 5:49:41 PM (IST)

நலவாழ்வுச் சங்கத்தில் பல்வேறு பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஆட்சியர் ஆனந்த் மோகன் அழைப்பு!
வியாழன் 23, ஜூலை 2026 5:43:08 PM (IST)


