» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திமுக அரசு தொடங்கிய அகழாய்வுப் பணிகளைப் புதிய அரசும் தொடர வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
செவ்வாய் 14, ஜூலை 2026 12:48:48 PM (IST)

தமிழரின் தொன்மை மற்றும் வரலாற்றுச் சான்றுகளைப் பாதுகாக்கும் வகையில், கடந்த திராவிட மாடல் அரசு தொடங்கிய அகழாய்வுப் பணிகளைப் புதிய அரசும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் எனத் திமுக தலைவரும் முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: தொடர்ந்து வெளிப்படும் தமிழர் தொன்மையின் தடங்களைப் பாதுகாப்போம்! தடங்கல் எதுவரினும், வரலாற்று உண்மையை நிறுவுவோம்! திராவிட மாடல் அரசு தொடங்கிய அகழாய்வுப் பணிகளைப் புதிய அரசும் தொடர்ந்து மேற்கொண்டு, தமிழர் வரலாற்றுத் தடங்களை உலகறியச் செய்ய வேண்டும்.
தமிழரின் வரலாற்றையும் நமது பண்பாட்டையும் குறைத்துக் கூறியும், சிதைத்து எழுதியும் வருவதோடு, வரலாற்றைத் திரிபுவாதங்களால் திசைதிருப்பும் சூழ்ச்சிகளும் அரங்கேறும் காலத்தில், தமிழ்த்தொன்மை உண்மைச் சான்றுகளோடு வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுதான் கீழடி, பொருநை, இரும்பின் தொன்மை!
மண்ணுக்குள்ளும் ஆழ்கடலுக்குள்ளும் மறைந்திருக்கும் இன்னும் பல கீழடிகளை மேலே கொண்டு வருவோம். இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றினைத் தெற்கிலிருந்து தொடங்கி எழுதுவோம்! வரலாற்றில் பெருமிதம் கொள்வதோடு, புதிய வரலாற்றைப் படைத்திடவும் பலம் பெறுவோம்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பணத்தை வாரி இறைத்து அப்பாவிகளின் வாயை அடைக்க முயற்சி: தவெக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!
சனி 18, ஜூலை 2026 5:46:54 PM (IST)

தமிழகத்தில் ஜூலை 22 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!
சனி 18, ஜூலை 2026 5:39:54 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : அமைச்சர் மரிய வில்சன் ஆய்வு!
சனி 18, ஜூலை 2026 5:27:03 PM (IST)

காளியம்மன் கோயில் கொடை விழா மாட்டு வண்டி பந்தயம் : 52 ஜோடி மாடுகள் பங்கேற்பு!
சனி 18, ஜூலை 2026 12:11:57 PM (IST)

வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை!
சனி 18, ஜூலை 2026 11:39:35 AM (IST)

அமைச்சர் ஆனந்த் மீது வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் ஞானசவுந்தரி த.வெ.க-விலிருந்து நீக்கம்!
சனி 18, ஜூலை 2026 11:29:22 AM (IST)


